பதிவு செய்த நாள்
08
செப்
2023
10:09
இன்று பெருமாள், மகா லட்சுமியை வழிபட சிறப்பான வாழ்வு அமையும். இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
மகாலட்சுமியை வணங்குவதற்கு ஏற்றநாள் வெள்ளிக்கிழமை. வீட்டில் லட்சுமி படத்துக்கு முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். வீட்டில் பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். விளக்கேற்றி வழிபட வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.