பதிவு செய்த நாள்
30
செப்
2014
10:09
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், நான்காம் நாளான நேற்று காலை, காளிங்க நர்த்தன அவதாரத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு, சர்வ பூபால வாகனத்திலும் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.2.90 கோடி வருமானம்பிரம்மோற்சவத்தின், மூன்றாம் நாள், ஏழுமலையானை தர்ம தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், ஆர்ஜித சேவைகள், சுதர்சன தரிசனம், பாதயாத்திரை தரிசனத்தில், 80,033 பேர் தரிசித்தனர். 39,784 பேர் தலைமுடிகாணிக்கை செலுத்தினர்.ஏழுமலையானுக்கு, 2.30 கோடி ரூபாய் உண்டியல் வருமானமும், ஆர்ஜித சேவைகளின் மூலம், 43,660 ரூபாய், பிரசாதங்கள் விற்பனை மூலம், 40 லட்சம் ரூபாய், வாடகை அறைகளின் மூலம், 18 லட்சம் ரூபாய் என மொத்தம், நேற்று முன்தினம், 2.90 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 3,471 ஸ்ரீவாரி சேவார்த்திகள் ஏழுமலையானுக்கு சேவை செய்தனர். திருமலையில் ஏற்படுத்திய தற்காலிக மருத்துவ முகாம்களில், 6,115 பேர் சிகிச்சை பெற்றனர்.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியாரின் மாலை, நேற்று திருமலையை வந்தடைந்தது. சென்னையில் உள்ள, இந்து தர்மார்த்த சமிதியின் சார்பில், 9 திருக்குடைகள் நேற்று, திருமலை தேவஸ்தானத்திற்கு அளிக்கப்பட்டது.