Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிராணாயாமத்தில் சர பிரயோகம் ஓங்காரத்தில் பிராணாயாமப்பயிற்சி
முதல் பக்கம் » யோக தீபம்
பிராணாயாமப் பயிற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
03:04

இப்போது நீங்கள் பிராணாயாமம் செய்வதற்குரிய ஆசனம் அல்லது இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு கால் கட்டை  விரலுக்கும் எந்த வித இடையூறும் இல்லாத பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். சின்முத்திரையில் உள்ள ங்கைகள் வானை நோக்கி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுங்கள். மூச்சானது ஏற்கனவே அது உள்ளே போயும் வெளியே வந்து கொண்டும் இரு க்கின்றது. அதை நாம் உணர்ந்து செய்வதன் மூலமாக நம் கட்டுக்குள் அதை கொண்டு வருகின்றோம்.

எதையும் அழிப்பது நமது நோக்கமல்ல. எண்ணங் களைப் புலன்களை இப்படி யோகத்தில் நாம் கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.  அதன் போக்கிலே சென்று அதைக் கட்டுப்படுத்த வேண்டும் அதுதான் முக்கியம். சரி இப்போது வழக்கமான சுவாசம் விட வேண்டும். இப்போது நான்  பிராணாயாமம் செய்யப் போகின்றேன் என்ற அந்த நினைவுக்குள் நீங்கள் வரவேண்டும். ஒன்றை நான் ஆயத்தம் செய்து கொண்டிருக் கிறேன் என்ற  நினைவுக்கு வந்து ஆரம்பித்து விட்டு அதைச் செய்ய வேண்டும். தியானமோ. பிராணாயாமமோ ஆழ்ந்து செய்யும்போது சிறிது நேரம் கழித்து அந்த  நான் என்ற அகங்காரம் தானாக உள்ளே வந்து விடும். அது உடனடியாக வந்து விடாது. பயிற்சியின் மூலமாக இவனிடமிருக்கும் சாதாரண நான்  என்பது போய் சுத்த அவஸ்தை என்று சொல்லக்கூடிய நான் இவனில் செயல்படத் துவங்கும். அது பயிற்சியில் ஒரு குறிப்பிட்ட கால விருத்தியினை  அதுவாகவே ஏற்படுத்திக் கொண்டு இவன் உள்ளே நினைவினைக் கொண்டு வந்து விடும்.

இப்போது நாடிசுத்திப் பயிற்சியில் ஆரம்பியுங்கள். முதலில் மெதுவாக இடது நாசியின் வழியாக ஏற்கனவே உள்ளிருக்கும் மூச்சை வெளியிடுங்கள்.  எப்போதும் பயிற்சியினை இடது பக்கம் தான் ஆரம்பிக்க வேண்டும். பிறகு வலது நாசியில் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிழமைக்கும் சரம் எந்த  நேரத்தில் எந்த நாசியில் வரவேண்டும் என்று ஒரு கால அளவு உள்ளது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு மாற வில்லையெ ன்றால் அந்தந்த கிழமைக்குரிய,பட்சத்திற் குரிய மூச்சை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய மாற்றுப் பயிற்சிகள் உள்ளது.
 
பிராணாயாமம் செய்யும் காலங்களில் ஒரு கால அளவினை நிர்ணயித்துக்கொண்டு வழக்கமாக அதைச் செய்து வந்தால் நல்லது. குறைந்த பட்சம் பூ ரகம் 5 வினாடிகள் என்று வினாடிக்கணக்கில் ஆரம்பித்தல் நலம். பயிற்சி அதிகரிக்க அதிகரிக்க இந்த நேரத்தையும் அதிகரிக்கலாம். அதனால்  தவறில்லை. நான்கின் மடங்காக அதை கும்பகத்தில் வைக்க வேண்டும். 5 வினாடிகள் பூரகம் என்றால் அதை 20 வினாடிகள் கும்பகமாக வைத்து பி றகு அந்த மூச்சை 10 வினாடிகளில் வெளியே ரேசகமாக விட வேண்டும். இவ்வாறு வினாடிகளைப் பழக்கத்தின் மூலம் அதிகரித்துக்கொள்ளலாம்.  (1-4-2 விகிதம்)

குறிப்பிட்ட வினாடிகள் பூரகம் வைத்துக்கொண்டாலும் மூச்சை இழுப்பதற்கு என்று எல்லை இருக்கிறதா என்று கேட்டால் அவரவர் பயிற்சியினைப்  பொறுத்த விஷயம் அது. மார்பு அதிகமாக விரிவடைய அடைய இழுக்ககூடிய காற்றின் அளவினை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

சிறிதளவே காற்றினை உள்ளிழுக்க முடியும் என்றால் இந்த சுவாசகோசக் கோளாறு உள்ளவர்களுக்கு எல்லாம் நிறைய மூச்சை உள்ளே இழுப் பார்கள். ஆனால் முழுவதுமாக வெளியே விட முடியாது. காரணம் நுரையீரல் இயல்பாச் சுருங்குவதில்லை.

கவனத்தில் கொள்ள வேண்டுபவை

பயிற்சியின்போது கழுத்து இதர நரம்புகள் புடைக்கும் அளவிற்கு அதை அடக்கி வைக்க வேண்டியதில்லை. இயல்பாகச் செய்யவேண்டும். அவ்வாறு  புடைக்கும் அளவிற்குச் செய்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். உடலில் வலி கழுத்துப்பகுதியில் ஏற்படும். பயிற்சி யின்போது காற்று வெளியே ÷ பாய்விடக்கூடாது என்பதற்காக 99 சதவிகித பயிற்சியாளர்கள் தொண்டையினை அடைத்து வைத்துக்கொண்டுதான் செய்கிறார்கள் அது தவறு.

பயிற்சிகளின் கால அளவு

குறிப்பிட்ட வினாடிகளில் இழுக்கப்பட்ட மூச்சை குறிப்பிட்ட அளவு உள்ளே வைத்துக்கொண்டு, அதனைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியே  விடும் போது இடகலை பிங்கலை இரண்டிற்கும் தசைத் தட்டுக்கள் வழியாக மூச்சுகள் சென்று சுழுமுனை வழி நோக்கிப் பயணம் செய்ய நாடிகள்  விழிப்புணர்வோடு இருக்க ஆரம்பிக்கும். இது உள்ளிழுப்பது. இருப்பில் வைப்பது. வெளிவிடுவதின் பலன் ஆகும்.

இதில் வினாடிக் கணக்குகள் என்றில்லாமல் மந்திரங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு செய்வார்கள். அதற்கு அஜபா என்று பெயர். அவற்றில்  இரண்டு உள்ளது. ஒன்று அனாகத மந்திரம் என்ற ஓம். அதையே நாம் நினைத்துக்கொள்ளலாம். ஒரு முறை பயிற்சி முடிந்து மீண்டும் துவங்குவதற்கு  முன்னால் ஓம் என்பதைப் பூரகம், கும்பகம், ரேசகம் என்பதற்கு முறையே ஒவ்வொரு முறையாக மூன்று முறை நினைத்துக்கொண்டுப் பயிற்சியினை  ஆரம்பிக்க வேண்டும்.

பயிற்சியின் முடிவில் மூச்சின் ஓட்டம் வேறு கலைக்கு மாறியிருந்தால் அதன் நேரத்திற்குள்ளே நீ பயிற்சி செய்திருக்கிறாய் என்று பொருள்.  மாறாவிட்டால் அந்த நேரக் கணக்கினையும் தாண்டிச்செய்து விட்டாய் என்று அர்த்தம். இதனை மாற்றுவதற்காக இன்னொரு முறை பிராணாயாமம்  செய்ய வேண்டும்.

தம்பனம் எனும் புறக்கும்பகம்

இப்போது புறக்கும்பகம் செய்வதைப் பற்றி பேசுவோம். அகக்கும்பகம் செய்யாமலும் புறக்கும்பகம் செய்யலாம். விளைவுகள் நேர் எதிரிடையாக  இருக்கும். குண்டலினி சக்தியினை எழுப்ப விரும்பும் சாதகர்கள் அகக்கும்பகப் பயிற்சியினை அடிக்கடி செய்வார்கள்.

அவ்வாறு செய்யும்போது முதுகெலும்பின் கீழ் நுனியில் உள்ள அடைப்பானது திறந்து அதன் வழியாகக் குண்டலினி சக்தி மேலே எழும்பும்.  குண்டலினி சக்தி என்பது பிராணணை அபானனில் பொழியும்போது எழுகின்ற ஆதார சக்தி ஆகும்.

10 வினாடிகள் பூரகம் பிறகு அது கும்பகத்தில் 40 வினாடிகள் ரேசகத்தில் 20 வினாடிகள் என்று அகக்கும்பகத்தில்  செய்திருப்போம். அந்த ரேசகத்தில்  20 வினாடிகள் வெளியே விட்டிருப்பீர்கள். அங்கே தேசம் என்று சொல்லக்கூடிய பகுதியில் 20 வினாடிகளுக்கு உரிய காற்றுதான் அங்கே இருக்கும்.  20 வினாடிகள் கழித்து அந்த மூச்சை மீண்டும் இழுங்கள் இங்கே புறக்கும்பகம் முடிவுற்றது. இதுதான் புறக்கும்பகத்தின் முறை.

இதைக் குறைந்தது 10 முறை செய்யவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் ஆரம்பிப்பதற்கு முன்னால் 5 நிமிடங்கள் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும்.  எந்த விதப் பதட்டமுன்றி மிகவும் இயல்பாக மன ஒருமையுடன் செய்தால் மனம் அமைதி பெறும்.  

மன அமைதி என்பது புற விஷயங்களுடைய நாட்டங்கள் வெகுவாகக் குறையும்.  இன்னும் இதற்கும் மேலான அமைதி தியானத்தில் கிடைக்கும். பி ராணாயாமத் திலேயே எண்ணங்கள் வெகுவாகக் குறையும். அப்போது தியானம் இன்னும் உங்களுக்குச் சுலபமாகி விடும். புறக்கும்பகத்திற்குப்  பெயர்தான் தம்பனம்.

இப்போது நீங்கள் தியானப்பயிற்சியினைச் செய்ய ஆரம்பிக்கலாம். ஏனென்றால் உங்களுடைய நடுநாடி எதையாவது செய்யத் துடிக்கும். இப்போது  உங்கள் மனதை நடுநாடியில் வைக்க வேண்டும். தாரணை மிகவும் எளிதாக வரும். தியானத்திற்கு பேருதவியாக இருக்கும்.

இப்போது நாடிகளைப்பற்றி பார்ப்போம். நாடி என்பது நரம்புகளின் கூட்டம். இந்த இடத்தில் (நான் வாஸ்குலர்) எனப்படும் தசை நரம்புகளைப் பற்றி  குறிப்பிடவில்லை.

நாடிகளில் உள்ள நரம்புகள்  ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாடிகளுடன் சம்பந்தப்பட்டு உள்ளது. நுணுக்க மான நரம்புகள் நம்முடைய உடலில்  உள்ளது. சிறிய வயதில் அதற்கு என்ன அழுத்தம் அளித்தாலும் அவை மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். வயதான காலத்தில் அந்நிலை பெரு ம்பாலும் ஏற்படாது என்பதால் அதை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

பிராணனின் தேவை

பிராணக்காற்று பற்றாக்குறையினால் தான் அதிகப் படியான நோய்கள் உடலில் வருகின்றது என்று மருத்துவர் கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு  செல்லுக்கும் பிராணக் காற்று தேவைப்படுகின்றது. செல்லிற்குத் தேவையான பிராணக்காற்றை  நுரையீரல்  மூலமாகத்தான் எடுத்துக் கொள்கிறது.  அதற்கு  இரத்தத்தந்துகிகள் என்று பெயர். இதயத்தில் இருந்து நம்முடைய நுரையீரலுக்கும், நுரையீரலில் இருந்து அது பல கிளைகளாக பிரிகிறது.  அங்கிருந்து பல பகுதிகளுக்கும் அதில் பிராண வாயுக்காற்று செல்கிறது.

அதிகமான காற்றை உள்ளே இழுத்து அதை உள்ளே தக்க வைப்பதூன் பிராணாயமத்தின் நோக்கம். காற்றை உள்ளே குறிப்பிட்ட நேரம் நிறுத்துவதால்  நுரையீரலில் செல்கள் மூலமாக உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இரத்தத்தினால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அதிக நேரம் காற்று உள்ளிரு க்கும்போது நுரையீரல் தானாகவே  அழுத்தத்தை ஏற்படுத்தி ஆக்ஸிஜன் செல்கள் மூலமாகப் பரவுகிறது. இது நம்முடைய கவனமின்றி நடக்கின்ற  நன்மைபயக்கும் செயலாகும். இதன் மூலமாக நம்மை அதிகமாகச் சுவாசிக்க வைக்கும். காரணம் பிராணாயாமப் பயிற்சியினால் பல செயல்பாடுகள்  உள்ளே நடைபெறுகின்றன. 72 ஆயிரம் நரம்புகளிலயே முக்கிய மானவை மூளையில் உள்ளன. அவைதான் நீயுரான்கள். அவற்றிற்கு ஆக்ஸிஜன்  கிடைக்கிறது. நடு நாடியில் தியானத்தில் கிடைக்கும் பிராணக்காற்றை நீயூரான்கள் எடுத்துக்கொள்கின்றன. அவை மிகவும் முக்கியமானவை.

பிராண வாயுக்கும், பிராணனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இரண்டும் வேறு வேறு. பிராண வாயு என்ற குதிரையின் மேல் பிராணன் சஞ்சரிக்கிறது.  அது எதன் வழியாகவது கண்டிப்பாக பயணிக்க  வேண்டும் என்பதால் பிராண வாயுவின் மேல் பயணம் செய்து உயிருக்கு உதவுகிறது. அதனால்  தான் இதற்கு உயிர்க்காற்று என்று பெயர். பிராண வாயு என்பது ஆக்ஸிஜன் தான். எனவே அந்த உயிரிற்கும், பிராண காற்றிற்கும் நெருங்கிய உறவு  உண்டாகிறது. பிராணக்காற்று தான் பிராணன் என்றால் இறந்தவனின் மூக்கிலே ஆக்ஸிஜன் ஏற்றினால் உயிர் வந்து விட வேண்டுமே. அப்படி வராது.  பிராண வாயு வேறு. பிராணன் வேறு.

பயிற்சி உத்தி 2

பிராணாயாமம் என்பது நமது மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, உள்நிறுத்தி பின்பு வெளிவிடுவது ஆகும். காலம் மற்றும் கணக்குகள் இவையெல்லாம்  சேர்கின்ற போது அந்தப் பிராணாயாமம் சிறப்படைந்து அதன் பயன் கிடைக்கிறது. அதில் எத்தனையோ முறைகளெல்லாம் பார்த்திருக்கிறோம். அடி ப்படையான ஒன்றை அடிக்கடி சொல்லக் காரணம் என்னவென்றால் நாம் பூரகம் செய்கின்ற போது (பூரகம் என்றால் மூச்சை உள்ளேயிழுப்பது.) ÷ ரசகம் செய்கின்ற போது (மூச்சை வெளியே விடுவது.) கும்பகம் செய்கின்ற போது (மூச்சை உள்ளே வைத்திருக்கின்ற போது) ஆக மூன்று  நிலைகளிலும் நிதானமான மூச்சு சீரான மூச்சு (க்ணடிஞூணிணூட்) அல்லது (உதிஞுண ஞூடூணிஞு) தான் பிராணாயாமத்தில் முக்கிய அம்சம். அதற்கு  ஏதுவாக நாம் ஓம்-ஐ சொல்கின்ற போது கூட உங்களுக்கு மூச்சு அதிக தேவை இருக்கிறது. எந்தளவுக்கு இருக்கிறது என்றால் உங்கள் பயிற்சியிலி ருந்தே தெரிய வரும். ஓம் என்ற எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க முடியுமோ என்பது  (மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடிகிறதோ ஒரே  மாதிரியாக வெளியிடுகிறீர்களோ) என்பதை ஓம்-ஐ சொல்லச் சொல்லி; தெரிந்து கொள்ளலாம்.

 
மேலும் யோக தீபம் »
temple news
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரைதத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை தித்திதன் அஞ்சலரை பத்தித்து ... மேலும்
 
temple news
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple news

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழிசரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் செய்தால் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar