Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிராணாயாமப் பயிற்சி மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோக ...
முதல் பக்கம் » யோக தீபம்
ஓங்காரத்தில் பிராணாயாமப்பயிற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
03:04

ஓம்-ஐ எவ்வளவு நேரம் நீட்டிச் சொல்கிறீர்களோ, அந்த அளவுக்கு முதலில் சுவாசத்தை உள்ளேயிழுத்திருக் கிறீர்கள் என்று அர்த்தம்.  இரண்டாவதாகக் கிடைத்த காற்றை நீண்ட நேரம் வைத்திருக்கப் பழகி விட்டீர்கள் என்று பொருள். அதாவது ஓம் மந்திரத்தை சுருதியோடு நீண்ட ÷ நரம் ஒலித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் அதிக நேரம் கும்பகம் செய்யாமலே பிராண வாயு உள்ளே நிறுத்தப்படுகிறது. ஓம் என்ற சப்தத்தை  வெளியிடுகிற போது குரல் நாண்கள் வழியாக வருகின்ற போது அந்த சப்தம் நுரையீரலில் இருக்கும் காற்றோடு வெளியே வரும் போது அதாவது ரேசகம். காற்று வெளியே வருகின்ற போது எவ்வளவுக்கு எவ்வளவு அது நீட்டிக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு (உதிஞுண ஞூடூணிஞு) உழவெசழட  இருந்தால் தான் நீட்டிக்க முடியும். இல்லாவிடில் நீட்டிக்க முடியாது. ரேசகத்தை அதிகப்படுத்த  பூரக நேரத்தைக் கூட்ட  வேண்டும். ஓம் சொல்லும் ÷ பாது என்னவாகிறது என்றால் ரேசகம் (காற்றை வெளியிடுதல்) நேரம் அதிகமாகும். பிராணாயமத்தில் 3-நிலைகள் இருக்கின்றன. உள்ளிழுக்கின்ற ÷ நரத்தைப் போல் 4-மடங்கு உள்ளிருத்தல், உள்ளியிருத்தல் போல் அதில் பாதி 2-மடங்கு வெளியேற்றுதல், ஆக இழுக்கின்ற காற்றை விட உள்ளே  வைத்திருக்கின்ற நேரம் அதிகமாகயிருக்கிறது. இங்கே வெளியிடுகின்ற நேரம் அதில் பாதியாகிறது. ஆக எடுத்த காற்று ஒன்றுதான். நீங்கள் வெளியே  விடுகின்ற போது புதிதாக உள்ளே வந்து போயிருக்கின்றது. அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதிக நேரம் காற்றை உள்ளே வைத்திருப் பதால் ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல பிராணன், அபானனோடு பொருந்தியிருக்கிறது. அங்கு உள்ளே அழுத்தப்படுகிறது. மூ ச்சை உள்ளே வைத்திருக்கின்ற போது எங்காவது பிடித்து இழுத்து வைக்க வேண்டாம். அது சாத்தியம் என்றால் மிகப்பெரிய காற்றை உள்ளே வாங்கி  வைத்துக் கொள்ளலாம். உள்ளே நிகழ்கின்ற விஷயம் தெரியாத காரணத்தால் உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய வாயின் வழியாக மூச்சை உள் ளேயிழுக்கிறீர்கள். அப்போது வாய் திறந்திருக்கிறது. அப்படி வாய் திறந்திருக்கின்ற போது எதைக் கொண்டும் அடைக்க முடியாது. (செய்து  காட்டுகிறார்) இப்போது பாருங்கள் வாய் திறந்தே இருக்கும் போது கும்பகம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். உள்ளே இருக்கின்ற காற்று வெளியே  போகாமல், வெளியேயுள்ள காற்று உள்ளே வராமல், இருக்க (உதுணீஞுணூடிஞுணஞிஞு) அனுபவம் வர வேண்டும். சில நோயுள்ளவர்கள் குறிப் பாக தொண்டை நோய், சிலேத்துமம்  இருப்பவர்கள் மற்றும் (குஞுஞிணூஞுச்tடிணிண ணிஞூ ஞடூணிஞிடு) இருப்பவர்கள் சில நேரங்களில் இந்த  அடைப்பை ( டூணிஞிடு) திறக்க முடியாமல் போகலாம். என்னென்றால் ஒட்டிக் கொள்ளும். எனவே ரொம்ப கஷ்டமில்லாமல் நிறுத்தப் பழக ÷ வண்டும். இதைச் செய்தால் தான் வெளிக்கும்பகத்தைப் பழக முடியும்.

எவ்வளவு வெளியிடுகின்ற நேரம், எவ்வளவு உள்ளே வைத்திருக்கின்ற நேரம், எதை வேண்டுமென்றாலும் மாற்றலாம். ஆனால் 1:4:2 (கீச்tடிணி)  என்ற விகிதம் தான் சாணீயானதாக இருக்கும். பிராணாயாமத்தில் தியானம், தியானத்தில் பிராணாயாமம் என்ற நிலை மிகப் பெரிய விஷயம். திய õனத்தின் போது பிராணாயமத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பிராணாயமம் செய்த பின்பு தியானம் செய்யுங்கள். தியானம் செய்கின்ற ÷ பாது சீராக மூச்சு வந்து போயக்; கொண்டிருக்கிறது. தியானத்தில் இருக்கின்ற போது எடுக்கின்ற மூச்சு சாதாரணமாகப் பிராணாயாமத்தில் இருக்கின்ற  மூச்சை விடக் குறைந்த (ஙணிடூதட்ஞு) ஆனால் நீண்ட சுவாசம். ஏனென்றால் தியானத்திற்கு முன்பே சுவாசத்தை முழுவதுவாக உள்ளே இழுத்தல்,  முழுவதுமாக வெளியே விடுதல் இதற்குக் கணக்குகள் கிடையாது. அந்த சுவாசம் தியானத்தின் போது அங்குலம், அங்குலமாகக் குறைந்து மூக்கின்  நுனி வரை வந்து பின்  சிறிது சிறிதாகக்  குறைந்து பூரகம் செய்ய முடியாதபடியாகி கடைசியில் அதுவாக அதற்கு தகுந்தாற்போல் சாணீசெய்து  கொள்ளும்.

சுர சூத்திரம்

நாம் ஆன்மீகத்தில் எந்த வழியைக் கையாண்டாலும் சரி. சரியை, கிரியை, யோகம், ஞானம், என்ற நான்கு வகையிலே இவற்றில் எது மேலானது  என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஒவ்வொன்றினுடைய பயிற்சி வேறுபாடுகளும், மன ஈடுபாடும் தான் இதற்கு முக்கியமானது என்பதால்;  இதை எந்த வழியிலே எந்த முறையானாலும் சரி நாம் எடுத்துக் கொள்ளலாம். பயன்படுத்தலாம். ஆக எதைக் கையாண்டாலும் அதில் ஈடுபாடு எப் படியிருக்க வேண்டும் என்றால் உடலும் மனமும் இணைந்து செயல்பட்டால் இந்த நான்கு வழிகளிலே எதைப் பின்பற்றினாலும் நமக்கு வெற்றியைத்  தரும். ஊக்கத்தைத் தரும். ஆகவே அந்த யோக மார்க்கத்திலே அடுத்தபடியாகச் சுர வழியிலே நாம் ஈடுபடுவதற்கு முன் அதைப் பற்றி தெரிந்து  கொள்வோம். சுரம் என்ற சப்தம் அல்லது தொனி என்று சொல்வார்கள். இதன் மூலம் எப்படி யோகத்திற்குச் சிறப்பு கிட்டுகிறது என்றும் பார்ப்போம்.

சுரத்திற்கு மட்டுமல்ல. உலகத்திற்கு  அனைத்து ஒலிக்கும்  அடிப்படையாக இருப்பது ஓம் என்ற சப்தம் தான். அகரம், உகரம், மகரம் என்ற மூன்று  எழுத்துக்களைக் கொண்டது. ஆக ஓம் என்ற ஒலிக்கு மூன்று எழுத்துக்கள் என்று சொல்வதை விட மூன்று உறுப்புகள் என்று சொல்லாம். மூன்று உறு ப்புக்களும் சேர்கின்ற போது அந்தச் சேர்க்கை தான் ஒங்கார ஒலி.

அதிலே அ என்ற எழுத்தை எடுத்துக் கொள்கிற போது அகர கலை உயிரெணழுத்துக்கள் என்று சொல்வார்கள்.

அ என்ற எழுத்து மட்டுமே அந்த சுரத்தின் அடிப்படையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படை அ வாக இருக்கிறது. அகர கலை உயி ர்ணழுத்துக்கள் என்று சொல்லி விட்டால், மொத்தம் 51 எழுத்துக்கள் இருக்கின்றன.
இப்போது எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அதற்கு முன்னால் அ என்ற அகரத்தின் சப்தம் நம்முடைய நாபிப் பகுதி சுவாதிஷ்டானமாக இருக்கிறது. உகரப் பகுதி என்பது இதயப் பகுதியில் இத யச் சக்கரமாக இருப்பது. இது 6 ஆதராங்களிலே ஒன்று. ஹஹஉகரம் என்ற எழுத்து இதயப் பகுதியுடைய இருப்பிடமாகவும்   இதயத்தின் இய க்கமுமாகும். ஆகவே உ என்ற எழுத்தே இதயம்.

மூன்றாவதாக மகரம் என்ற எழுத்து அது கண்டம் அல்லது கழுத்து என்ற இடத்தில் விசுத்தியாக இருக்கிறது. கண்டத்திலிருந்துதான் சப்தம் வருகிறது.  ஏனென்றால் அதன் உள்பக்கத்தில்தான் இரு குரல் நாண்கள் இருக்கின்றன. இது குரல் வளையின் கீழே அமைந்துள்ளது. காற்று அதில் படும்போது  தான் அதன் அசைவுகளிலே சப்தம் உண்டாகிறது.

 மகரக்கண்டம் கொண்ட சிவனை திருநீலகண்டன் என்று சொல்வோம். விஷத்தை உண்டதால் அந்த இடத்தில் நீலமாக இருப்பதால் திருநீலகண்டன்  என்று கூறுவோம். இதுவே விசுத்தியின் இருப்பிடப்பகுதி.

இவ்வாறாய் அகரம், உகரம் என்ற இடத்திலே நான் 51 என்ற விஷயத்தைப் புகுத்தினேன். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.மொழி ஆய்வில்  நாம் இறங்கவில்லை. இதே 51 எழுத்துக்களைப் பற்றி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோக சூத்திரத்தில் கூறியிருக்கிறார்.  அதையும்; பார்போம்.

இந்தச் சுர வழியே நாம் தமிழ், வடமொழி என பன்மொழி பேசுகின்றோம். தமிழ் மொழிக்கு முதலாகத் தோன்றியது வரி வடிவம் அல்லது  எழுத்துக்கள். சப்தத்தை அப்படியே பிரதிபலிக்க, ஒருவர் கூறியதை மற்றொருவர் அவ்வாறே கூறுவதற்கு வரி வடிவம் தேவை. அந்த வரி  வடிவத்தை எழுதி அதற்கு இன்னென்ன சப்தத்தை சொல்லிக் கொடுத்தால் அந்தந்த எழுத்துக்களின் மூலம் அந்தந்த சப்தம் வரும். ஆகவே தமிழ்  மொழி எத்தகையதாக இருந்தது. எத்தனை வரி வடிவங்கள் இருந்தன என்பதை பார்போம்.

ஆரம்பத்திலே மொழியை உருவாக எழுதினார்கள். அதாவது சித்திரமாக எழுதினார்கள். தமிழ் எழுத்துக் கூட உருவமாக இருந்தது. அதைச்  சொல்கின்ற போது சில சந்தேகங்கள் வரும். தமிழ் மொழி உருவாக, சித்திரமாக எழுதினார்களா என்று. ஆகையால் தான் ஆதாரத்தோடு சொல்கின்÷ றன், அப்படிப்பட்ட உருவ எழுத்துக்கள் தமிழிலிருந்து தான் தோன்றியிருக்கின்றன.

தமிழிலிருந்து  சீனம், கடாரம், சுவேரியம், பினிசியம், எகுபதியம் என்கின்ற பகுதிகளிலும் இந்தச் சித்திர வடிவங்கள் அம்மொழிகளில்  எழுத்துக்களாக இருந்தது. இப்போதும் சீனாவில் சித்திர வடிவிலேயே எழுத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் நாம் இன்று அவ்வாறு    வைத்திருக்கவில்லை. இதற்குப் பிறகு கோல் எழுத்துக்கள் வந்தன. குச்சி குச்சியாக நீளமாய் இருக்கும். அந்தக் கோல் வடிவ எழுத்துக்கள் எ ங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்றால் முற்காலத்தில் மராட்டியம், வங்கம், ஆரியம், கோசலம், பதுச்சியம், பலியம் போன்றவற்றில் கோல்  எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது கூட வட மொழியில் கோடு கோடாக வரும். உருவ, கோல் எழுத்துக்களுக்கு பிறகு  வட்ட  எழுத்துக்களாக மாறின.

வட்ட எழுத்துக்கள்

வட்ட எழுத்துக்கள் தமிழில் எங்கெல்லாம் பரவியிருந்தன என்று கேட்டால் தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம், இந்த நான்கு மொழிகளிலும்  வட்ட எழுத்துக்கள் இருந்தன. இப்போதும் அந்த வடிவிலயே அந்த எழுத்துக்கள் அங்கெல்லாம் இருக்கின்றன. இப்போது அவையெல்லாம் மாறி  சதுர எழுத்துக்களாக இருக்கிறது. நாம் அந்த வடிவிலேதான் தமிழை இப்போது எழுதுகிறோம்.

இப்போது எதற்காக எழுத்து ஆராய்ச்சி? சுர வழியிலே வந்திருக்கிறோம். சுர வழியிலே உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் அந்தக் காலத்திலே  இருந்தன. ஏன் அதை சொல்கிறோம் என்று பின்னால் புரிய வரும். அந்த கோல் எழுத்துக் காலத்தில் உயிர் எழுத்துக்கள் 16ஆக இருந்தது. மெய்  எழுத்துக்கள் 35ஆக இருந்தது. மொத்தம் 51 எழுத்துக்கள்.

வட்ட எழுத்துக் காலத்திலும் அதே மாதிரி உயிர்,மெய் எழுத்துக்கள் 35 யாக இருந்தது. ஆனால் சதுர எழுத்துக்கள் காலத்தில் வரும் போது 4  எழுத்துக்கள் அதிலிருந்து மறைந்து விட்டன. இப்போது உயிர் எழுத்துக்கள் 12 அடுத்து 1ச் சேர்த்து 13 ஆக இருக்கிறது. மெய் எழுத்துக்கள் 18 ஆக  இருக்கிறது. 35  18ஆகவும்,16 பன்னிரெண்டாகவும் (12) குறைந்துள்ளது. ஆக மொத்தம் 20 எழுத்துக்கள் குறைந்து விட்டன. ஆக ஆய்த எழுத்தாக 1  சேர்க்கப்பட்டது. 12 பிளஸ் 1.

அம்பாளை, இறைவியை லலிதா சகஸ்ரநாமத்தில் வாக் தேவதைகள் ஒருவரான  லோபா முத்திரையால் வணங்கப்பட்டவளே என்று குறிப்பிடப் பட்டுள்ளது ஆக மந்திரத்திலேயே வருகின்றது என்று சொன்னால் அகத்தியர் மனைவிக்கு எவ்வளவு பெருமையிருக்கிறது சிறப்பு இருக்கிறது என்று  நமக்குத் தெரிய வருகிறது.  அகத்தியர் பெரு அகத்தியம், சிறு அகத்தியம் என்று இரண்டு இலக்கணங்களை எழுதினார். அதில் எதை முதலில்  எழுதினார் என்று தெரியவில்லை. ஆகவே அந்தப் பழந்தமிழுக்கு இவர் தான் செந்தமிழ் என்று பெயர் வைத்தார்.

அந்த வட்ட எழுத்துக்காலம் என்று சொன்னால் அதை இராமாயண காலம் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் திருமூலர் அந்தக் காலத்தில் வாழ்ந் திருக்கிறார். அப்போது எத்தனை வருடங்களுக்கு முன்னால் இருந்திருக்க முடியும். இராமாயண காலம் என்றால் கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு  முன்னதாக வட்ட எழுத்துக்கள் இருந்தது. என நம்முடைய ஆராய்ச்சியாளர்கள் கூறும் வரலாறு. இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள்  மற்றும் புராணங்களுக்கு சரித்திர ஆராய்ச்சியாளர்கள் காலங்களைப் பல விதமாக  கணக்கிடுகிறார்கள்.

தசரத ராமர் காலத்தில் ராவணனுடைய சேனை மொழி தெலுங்காக இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

திருமூலர் இராமாயண காலத்தில் வாழ்ந்தார். திருமூலர் என்பவர் ஒரு முனிவர், அவர் மூலன் என்ற உடலிலே புகுந்தார்; என்று சொல்வார்கள். தி ருமூலர் என்பவர் நந்திதேவருடைய சீடர்களுள் ஒருவரான சுந்தரானந்தர்; என்ற முனிவராவார். (பதினெண் சித்தர்களுள் ஒருவரான சுந்தரானந்தர்  அல்ல)

சுர வழியின் அற்புதம்

யோக நெறியில் சுர வழியில் மேன்மை பெறுகின்ற போது அதன் முதிர்ச்சியை அடைகின்றபோது இந்த சுர வழி என்னவாகும் என்றால் துடிப்பே  நின்று விடும். உடம்பில் உள்ள அனைத்து செல்களும் தனது பணியை நிறுத்திவிடும். இரத்த ஒட்டம் நின்றுவிடும். இதயம் துடிப்பதில்லை. ஆனால்  உயிர் இருக்கிறது. அங்கே தனஞ்செயன் வர முடியாது. என்னென்றால் இவனுடைய அக உணர்விலே அனைத்தும் கட்டுப்பட்டு நிற்கின்றன. உயிர்  இல்லை, ஆனால் உயிரோட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறான் சாதகன். ஆனால் உயிரோடு இருக்கிறான். அப்படிபட்ட சூழ்நிலையில் இந்தச் சுரவழி  எங்கு பயன்படுகிறது?

இவனுடைய சப்தமும் ஒளியும், இந்த நிலையிலும் உணர்வின் மூலம் தெரிகிறது. அந்த யோக வழியிலோ, சமாதி நிலையிலோ இருக்கும்போது  அவனுடைய உடம்பு செயல்படாது, மூச்சு இல்லாத போது மெட்டபாலிக் சிஸ்டம் (வளர்சிதை மாற்றச் செயல்பாடு) வேலை செய்ய முடியாத  நிலையில் எப்படி இவன் உணர்கிறான். இவனுடைய மூளை எப்படி வேலை செய்யும். மூளை வேலை செய்யாத போது எப்படி உணர முடியும்  என்றால் புறப்பார்வையில் அல்ல. அகப்பார்வை என்று சொல்லக்கூடிய உயிர் ஒளிபெற்று அந்த உயிருக்கு உணர்வு வந்து அந்த உணர்வினால்  உணரப்பெற்று சுரம் வந்திருக்கிறது.  எல்லாவிதமான நல்ல நாதங்கள் கேட்பதோடு பல நிறங்களும்; இவனுக்குத் தெரியும். காணாத பல காட்சிகளும்  தெரியும். பிரபஞ்சம் முழுவதையுமே எந்த இடத்திலிருந்தும் இவனால் பார்க்க முடியும். அவ்வளவு ஆற்றல்களை அக உணர்வு கொடுக்கிறது. மே லும் நிற வழி பற்றி மற்றொரு சமயம் பார்ப்போம்.

இவனைப் பொருத்தமட்டில் உடம்பில் சுரம், ஒளி இல்லை. ஆனால் இயக்கம் மட்டும் இருக்கும். அக உணர்வைப் பொருத்தமட்டில் சுர வழி உதவி  செய்கிறது. ஆகையால் சுர வழியில் சுரத்தைத் தொட்டு சுரத்தில் நிற்கின்ற போது அந்த ஆதிபரம்பொருளைப் பார்க்கின்ற சூழல் ஏற்படுகிறது. அங்கே  நாதம் எழுகின்றன. உ;டல் ஒளி பெறுகிறது. அப்போது கலைகள் நின்றுவிட்டன. அதாவது நாதம், விந்து, கலை என்பார்கள். அதன் பிறகு வேறு  கலைகள் ஏற்படுகின்றன. அவை 16 கலைகள் ஆகும். கலைகள் பற்றி பிறகு பார்போம். மேற்சொன்ன கலைகள்  இணைந்து கலக்கின்ற போது அமுது  உண்கிறான் என்று சொல்லப்படுகிறது.

பார்ப்பது, கேட்பது, மட்டும் அகத்தில் நிகழவில்லை. அக உணர்வில் இவன் இந்தச் சுவையைக் காண்கிறான். சுவை காண்பது என்பது அமுதம் பரு குவது என்று சொல்வார்கள். இதையெல்லாம் பார்த்தோ, கேட்டோ, படித்தோ இல்லாமல் அவரவர் அனுபவத்திலே அறிந்து நிலையை அடைந்து  ருசிப்பவருக்குத் தான் தெரியும்.

ஆனால் நாம் பேசுவதில் பல பிடிபடாத விஷயமாக இருக்கும். அதே சமயத்திலேயே மிக அரிய யோகக் கலையின் மூலம் ஒவ்வொரு பயிற்சியில்  ஈடுபட்டுக் கொண்டியிருக்கின்ற போது அல்லது முழவதும் அறிந்து பிரவேசிக்கின்றபோது அவனால் மட்டுமே புரிந்துக்கொள்ள  முடியும்.  வெளியிருந்து எவரும் அவனுக்கு உதவி செய்ய முடியாது. எவரும் அதை உணர முடியாது

சுரவழியை நம்முடைய முயற்சியின்றி பிறர் எவரும் நமக்கு உதவி செய்ய முடியாது. ஆனால் குருநாதர் நினைத்தால் முடியும். எப்போது  முடியுமென்றால் நீங்கள் உங்களுடைய உணர்வை அவரிடம் செலுத்தி அவரை நினைக்கவேண்டும். அவர் நேராக உங்களிடம் வந்து கையைப் பி டிக்க மாட்டார். ஏனென்றால் அவர் உணர்வு கொண்டு இருக்கின்ற படியால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். தூண்டி விட முடியும்; மற்றபடி  பார்த்தோ, கேட்டோ, மற்றவர்களோ, வழி நடத்திவிட முடியாது. ஆகையால் சரியை, கிரியை, ஞானம் போன்றவற்றில் ஆன்மீக பயிற்சிக்கு வேறு  எவராலும் உதவி செய்ய முடியாது. அவரவர் பயிற்சியால் மட்டுமே அது முடியும், ஏனென்றால் ஒரு சுகத்தை ஒருவன் அடைகின்றான் என்றால் அது  அவனுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவருக்கு எப்படித் தெரியும். இதனால் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் இது தான் நம்முடைய பணி,  இந்தப் பணியைத் தவிர உலகத்தில் தலையாய பணி வேறில்லை. இந்தப் பணி சிறக்குமானால் உலகத்தில் உள்ள அத்தனையும் நம்மால் சிறப்பாகச்  செய்ய முடியும். பிறருக்கு உதவ முடியும். பிறருக்கு உதவுகின்ற பணியை நாம் ஏன் செய்யக் கூடாது? பிறருக்கு எப்படி உதவ முடியும் என்றால் அது  உங்களுக்கே தெரியும். எங்கேயோ சிலர்; சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு, புலன்களின் வழியே சென்று கொண்டு இருக்கும்  இவர்களால் ஏதோ பயன் உலகத்திற்கு இருக்கிறது. ஆனால் ஞானிகள் என்பவர்கள் தவம் செய்யக் கூடியவர்கள்  இவர்கள் எங்கோ காட்டில் ஒதுங்கி  இருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்று இவர்கள் சொல்வார்கள். ஆனால் அங்கிருந்தபடியே அவருடைய பயிற்சிக்குத் தக்கப்படி எந்த  எல்லை வரை போக முடியுமோ, அந்த எல்லை வரை அவருடைய அருளைப் பாய்ச்ச முடியும்.

சூரியன் எங்கோ இருந்து; கொண்டு உலகம் முழுவதிலும் சக்தியைப் பரப்புகின்றான். அது போல் நீர் என்பது தனித்தனி துளிகளாக இல்லை. பல  துளிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. மண் பிளஸ் தளம் மண்டலம் என்று சொல்வது போல் அது நீர்த்தளம். அந்த நீர் பெருகியிருப்பது போல அல்லது  ஆழம் காண முடியாத அளவு இருக்கின்றது போல, கடலின் ஆழத்தை எப்படிச் சொல்ல முடியும். ஆனால் ஆழம் இருக்கிறது. தரை இருக்கிறது.  ஆனால் அதன் பின் வந்தவர்கள் முக்கால் பங்கு நீர், கால் பங்கு நிலம் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்தளவு உண்மை என்று ஆசிரியர்களிடம் ÷ கட்கும் போது அதன் எடை, மற்றும் பரிமாணத்தை சொல்கிறார்களா? என்றால் பரிமாணத்தை மட்டும் தான் சொல்ல முடியும்.

இந்த பூமியில்லை என்றால் (நிலம்) நீர் எப்படி அதில் நிற்கும். ஆகையால் அந்த நீர் பரவியிருக்கின்ற போர்த்தியிருக்கின்ற பரப்பளவைத் தான்  சொல்ல முடியும். அதுபோல் ஞானியரின் ஞான அருளை விரித்துப் பார்க்க முடியாது. அருளின் ஆழத்தை யாரும் காண்பாரில்லை.

இன்னும் சொல்லப் போனால் கண்டவர் விண்ட தில்லை. விண்டவர் கண்டதி;ல்லை என்பர். இந்த பயிற்சியி;ல் முக்கியமானது ஒரு போதும்  இறைவனின் துணையில்லாமல் எதுவும் நடக்காது என்று நினைத்து அவரை முன்நிறுத்திப் புலால் உண்ணாமல் இருத்தல் அவசியம். மேலும்  சொல்லப் போனால் நான் நல்ல சித்தத்தோடு இல்லை என்றால் நல்ல சித்தங்கள் கலக்கின்ற இடத்தில் இருந்திருக்க மாட்டேன என்பது தான் உண்மை யாக இருக்க வேண்டும்.

நான் ஒரு திருக்கோவிலுக்கு செல்கின்றேன் என்றால் என்னுடைய மனம் சுத்தமாக இருக்க வேண்டும். என் மனம் சுத்தமில்லாமல் இருந்தால் நான் ÷ காவிலுக்கு போகக் கூடாது என்பது என்னுடைய கோட்பாடு. மற்றவர்களுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு வருகிறவர்கள் அழுக்கோடு வரவில்லை.  பெரிதும் அவதியோடு வருகிறார்கள்.

நாம் மனத்தில் அழுக்கோடு போனால் அது மற்றவர் களையும் பாதிக்கும். அது புண்ணியத்தைச் சேர்க்காது. பாவத்தைச் சேர்க்கும். எனவே நல் லோர்கள் இருக்கு மிடத்தில் கூடியவரை அந்த இடத்தில் இருக்கும் வரையாவது மனம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டு÷ காள். மனம் பல கவலைகள் இருக்கும் போது அது அங்கு வருவர்களுக்கு உணர்வு அலைகளாகப் பரவும். மனம் நிறைவோடு இருக்க வேண்டும்.

எது வேண்டுமானாலும் நடக்கட்டும்  என்று உள்ளே  செல்பவர்களை இறைவன் தண்டித்து விடுவானா? இல்லை இறைவன் மிகக் கருணை  உள்ளவன். அவனுக்கு உலகில் தாழ்ந்தவன், உயர்ந்தவன், என்ற பாகுபாடு இல்லை. எல்லோருமிடமும் ஒரே பார்வையாகப் பார்க்கிறான். இதை நான்  உங்களுக்கு சமதானத்திற்க்காகச் சொல்லவில்லை. கொலைபாதகன் ஒருவன் இங்கு வந்திருக்கிறான் என்றால் அவன் இறைவனை இங்கு வேண்ட  வந்திருக்கிறான், அவனுக்கும் அருள் கிடைக்கும். ஆனால் நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாகத் துணை செய்வார். ஆனால் அநியாயமானதாக  இருந்தால் அது துணை செய்வது போல் தெரியும். ஆனால் அது துணையாகாது. திருமூலர் சொல்கிறார் தேவர்கள் கூட யார் மூலமாகவாவது வந்து  எதாவது தவறுகள் செய்து விடுகிறார்கள் என்று. ஆனால் மனிதன் அப்படியல்ல. மிகப்பெரிய விஷயத்தைப் பெற இவனால் முடியும். இறைவனோடு  கலந்து விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மாமனிதன் முன்னால் கோள்களும், விண்ணவர்களும் மண்டியிட்டு நிற்பார்கள். ஏனென்றால் அகத்தில் சிறந்து விளங்குகிறான். தவத்தில் இரு க்கிறான் அவன் இதயம் சுத்தமாக உள்ளது. இறை நெறியோடு இருக்கிறான்.  இறைவனின் நிலைக்கு வருவதற்கு எத்தனை  காலம் ஆகும் என்பது  தெரியாது.

ஆகையால் சிறுகச் சிறுக மேம்பட வேண்டும். நாம் ஒவ்வொரு செயல்பாட்டிலும் களங்கமற்று இருக்க வேண்டும். நிஷ்களங்கமாக இருக்க ÷ வண்டும். அப்போதுதான் சாதகன் எல்லாவற்றையும் பெற முடியும். நமக்கு என்ன வேண்டும், உடை வேண்டுமொன்றால் உடுத்தி கொள். ஆனால்  அவசியத்திற்கு எடுத்துக் கொள். அதற்காக தேவைக்கு மீறி வேண்டாம். உன் தேவைகள் நியாயமானதாக இருந்தால் கிடைக்கும். அது தான் ஆன்மீக  நெறி.

கால், கைகளை மடித்து, ஜெபம், தவம், செய்து பல குறியீடுகளை எல்லாம் மாட்டிக்கொண்டு அலைவதில்லை ஆன்மீகம்.

முதலில் ஆன்மீகம் என்றால் எளிமையாக உன்னுடைய தேவைகளைத் தன் கட்டுக்குள் கொண்டு வருவது. ஏனென்றால் தேவைகளைக் கூட பிறரு க்காகக் கொடுத்து விடு. மற்றவை எல்லாம் மனநிறைவு தராது. இதை புரிந்துக் கொண்டு பற்றில்லாமல் எந்த பொருள்களின் மீதும் மனதை  வைக்காமல் இருக்க வேண்டும். உன் மனம் உன்னோடு மட்டும் இருக்கட்டும்.

ஏனென்றால் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அந்தப் பொருளின் மீது உன் மனம் சென்று விடும். அப்படி யென்றால் நான் நல்ல உடைகளை  உடுத்தக் கூடாதா? என் மனைவி மக்களுடன் சேர்ந்து வாழக் கூடாதா? என்று கேட்கக்கூடாது. வாழ்க்கை சிறக்க வேண்டும். என்றால் நாம் பிறருக்காக  வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால் உனக்காகவேனும் ஒழுங்காக வாழ வேண்டும். ஒழுங்கான வாழ்க்கை என்பது நெறி, பண்பாடு, இறை  உணர்வு கொண்டு வாழ வேண்டும்.

 
மேலும் யோக தீபம் »
temple news
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரைதத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை தித்திதன் அஞ்சலரை பத்தித்து ... மேலும்
 
temple news
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple news

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழிசரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் செய்தால் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar