வேஷ்டியும் லேஞ்சம் தரித்து தடிக்கம்பு மேலெடுத்து தோட்டி கருப்பன் எனப் பெயருஞ் சொல்லி - தொடர்ந்திரவில் பாட்டுரை சிற்றம்பலக் கவிராயர் முன்பற்று வழி காட்டிய சிங்கைத் துரையே முன்னோடி என்காவலனே!
படுக்கும் பொழுதும் நடக்கும் பொழுதும் பரிந்த சனுகு தொடுக்கும் பொழுதும் த்ரேக தியானம் தொழும் பொழுதும் அடுக்கும் பொழுதும் என் சிந்தை உன்பால் கருணைப் பிரதாப முன்னோடி மகாதெய்வமே!
நீட்டிய கைதனில் பாயந்தோடி அந்த நிமிடந்தனில் நாடிய காரியம் உனைப்போல் முடிக்க வல்லாரு முண்டோ கோட்டி செய்யும் வலுப்பேய்களை சங்கிலி கொண்டுகட்டி மாட்டிய உக்கிரதீரா முன்னோடி மகாதெய்வமே!
கல்லாத நெஞ்சரை ஈயாஉலுத்தர் கசடர் தம்மை சொல்லான செந்தமிழாற் பாடிஎன்றுமே யான்துதித்து செல்லாமற் சிந்தையில் எண்ணும்படிக் கருள் செய்திடுவாய் வல்லார்க்கு வல்லதோர் தீரா முன்னோடி மகாதெய்வமே
மண்ணோடிவந்து வணங்கு கருப்பண்ணர் மகிழ் முன்னோடி ஒன்று மொழியக்கேள் - என்பேரில் நீபக்ஷம் வைத்து நான்நினைத்த படியே கிருபை தாபக்தன் மேல்விரும்பித் தான்.
செங்கீரை முன்னோடிக் கருப்பர்
செங்கீரை என்கின்ற சிங்கார சிற்றூரில் சீர் கொண்டிலங்கும் தேவா!