Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முன்னோடிக் கருப்பர் துதி! கருப்பர் வாரார்! கருப்பர் வாரார்!
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
பெரிய கருப்பர் போற்றி!
எழுத்தின் அளவு:
பெரிய கருப்பர் போற்றி!

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
05:07

1. அற்புதத் தெய்வமே        போற்றி
2. அனைவரையும் காப்பவனே        போற்றி
3. அலங்காரப் பிரியனே         போற்றி
4. அபிஷேகப் பிரியனே        போற்றி
5. அள்ளிமுடிச்ச கொண்டை அழகனே    போற்றி
6. அண்டமெல்லாம் இருப்பவனே        போற்றி
7. அரிவாள் ஏந்தியவனே        போற்றி
8. அகந்தையை அழிப்பவனே         போற்றி
9. ஆபத்தில் காப்பவனே        போற்றி
10.இல்லத்தைக் காப்பவனே        போற்றி
11. ஈடில்லா தெய்வமே        போற்றி
12 உருமாலை கட்டியவனே        போற்றி
13. உலகைக் காப்பவனே        போற்றி
14. உள்ளத்து இருளைப் போக்குபவனே    போற்றி
15. உண்மைப் பரம் பொருளே        போற்றி
16. ஊக்கம் தருபவனே        போற்றி
17. எங்கள் குல தெய்வமே        போற்றி
18. என் குருநாதனே        போற்றி
19.எந்தன் மனத்தில் இருப்பவனே        போற்றி
20. எங்கும் நிறைந்தவனே        போற்றி
21. எத்திசையிலும் இருப்பவனே        போற்றி
22. எங்களுக்கும் அருளும் கருப்பரே     போற்றி
23. ஏழைப் பங்காளனே        போற்றி
24. ஐம்பொன் அழகனே        போற்றி
25. ஐயனாரின் தோழனே         போற்றி
26. ஐஸ்வரியம் தருபவனே        போற்றி
27. ஒளிமய மானவனே        போற்றி
28. ஒப்பற்ற தெய்வமே        போற்றி
29. ஓவியமாய் பிறப்பே        போற்றி
30. ஔஷதமானவனே        போற்றி
31. கருப்பண்ண சாமியே        போற்றி
32. கலியுக மூர்த்தியே        போற்றி
33. கண்கண்ட தெய்வமே        போற்றி
34. கருணைக் கடலே         போற்றி
35. கவலைகளைத் தீர்ப்பவனே        போற்றி
36. கல்வியைத் தருபவனே        போற்றி
37. கண்ணின் கருமணியே        போற்றி
38. காவல் தெய்வமே        போற்றி
39. காலமெல்லாம் காப்பவனே        போற்றி
40. கார்மேக வண்ணனே        போற்றி
41. கீழ்த்திசை பார்த்த நாயகனே        போற்றி
42. குண்டலம் அணிந்தவனே        போற்றி
43. குழந்தை வரம் தருபவனே        போற்றி
44. குதிரை வாகனனே        போற்றி
45. குறைகள் தீர்ப்பவனே        போற்றி
46. குட்டி நிமித்தம் கேட்பவனே        போற்றி
47. குற்றம் பொறுக்கும் குணாளனே    போற்றி
48. குருவுக்கும் குருவே        போற்றி
49. கூப்பிட்ட குரலுக்கு வருபவனே    போற்றி
50. கோடி புண்ணியம் கொடுப்பவனே    போற்றி
51. சவ்வாது பூசுபவனே        போற்றி
52. சகலகலா வல்லவனே        போற்றி
53. சந்தனப் பிரியனே        போற்றி
54. சங்கடங்கள் தீர்ப்பவனே        போற்றி
55. சலங்கை கட்டியவனே        போற்றி
56. சர்வகாலமும் காப்பவனே         போற்றி
57. சாஸ்தாவின் காவலனே        போற்றி
58. சிவனின் அம்சமே        போற்றி
59. சிவசக்தி அம்சமே        போற்றி
60. சிவவடிவச் செல்வனே        போற்றி
61. சுக்குமாந்தடிச் சுந்தரனே        போற்றி
62. செங்கீரைச் சிங்கமே        போற்றி
63. செல்வம் தரும் செல்வனே        போற்றி
64. ஞாயிறு வடிவானவனே        போற்றி
65. திருமாலின் தளபதியே        போற்றி
66. திங்கட்சடையோனின் தொண்டனே    போற்றி
67. நகரத்தாரின் நாயகனே        போற்றி
68. நல்லதைச் செய்பவனே        போற்றி
69. நற்புகழ் நல்குபவனே        போற்றி
70. நெஞ்சில் நிலைத்தவனே        போற்றி
71. நெற்கதிர் விளையச் செய்பவனே    போற்றி
72. பலவான்குடிப் பகவானே        போற்றி
73. பரம்பரையைக் காப்பவனே        போற்றி
74. பணியாரப் பிரியனே        போற்றி
75. பங்காளிகளைக் காப்பவனே        போற்றி
76. படையல் பிரியனே        போற்றி
77. பக்தர்களுக்கு அருள்பவனே        போற்றி
78. பகைவர்களை நடுங்கச் செய்பவனே    போற்றி
79. பதினெட்டாம் படிக் கருப்பரே        போற்றி
80. பாச்சோற்றுப் பிரியனே        போற்றி
81. போற்றி பல பாட வைத்தவனே    போற்றி
82. மாங்கல்யம் காப்பவனே         போற்றி
83. முன்னோடிக் கருப்பவரே        போற்றி
84. முக்கண்ணன் தளபதியே         போற்றி
85. முறுக்குமீசை அழகனே        போற்றி
86. முண்டாசு கட்டியவனே        போற்றி
87. முள்செருப்பு அணிந்தவனே        போற்றி
88. மெய்வடிவானவனே        போற்றி
89. ராங்கியத்து ராஜாவே        போற்றி
90. ருத்திராட்சம் அணிந்தவனே         போற்றி
91. வயிரவன் கோயிலின் வள்ளலே    போற்றி
92. வருண தேவன் போற்றுபவனே    போற்றி
93. வாரிவழங்கும் வள்ளலே        போற்றி
94. வாழவைக்கும் தெய்வமே        போற்றி
95. வாழ்வு தருபவனே        போற்றி
96. வெற்றிதரும் கருப்பரே         போற்றி
97. வெள்ளியங்கி அணிந்தவனே        போற்றி
98. வெவ்விய  காலனை வீழ்த்துபவனே    போற்றி
99. வெண்ணையுண்டோனின் அம்சமே    போற்றி
100. வேந்தர்க்கு வேந்தனே        போற்றி
101. வேண்டும் வரம் தருபவனே        போற்றி
102. வேட்டைப் பிரியனே        போற்றி
103. வேலங்குடிக் கருப்பரே        போற்றி
104. வேதவடிவானவனின் சீடனே    போற்றி
105. வேள்வி வேந்தனின் காவலனே    போற்றி
106. வேற்றுமையின்றி அருள்பவனே    போற்றி
107. வையம் காக்கும் வள்ளலே        போற்றி
108. ஓம் ஸ்ரீ பெரிய கருப்பண சுவாமியே போற்றி போற்றி
       
பலவான்குடி பெரிய கருப்பையா

ஆடிவெள்ளியில் ஆண்டுதோறும் உனக்குப் படைப்பையா
தேடிவந்து எம்மைக் காப்பது உன்னுடைய பொறுப்பையா
கூடிநாங்கள் கூப்பிடுகிறோம் எம்கவலை தீருமைய்யா
பாடி அழைக்கிறோம் பரம்பரையைக் காத்திடுவாய் கருப்பையா

காய்வெட்டி பழுக்கப்போட்டு பங்காளிகள் கூடினோம்
நோய்நொடி யின்றி எங்களை காத்திடுவாய் கருப்பையா
செங்கீரையில் வீற்றி ருக்கும் சிங்காரக் கருப்பையா
பொங்கல் வைத்து பூஜை கொடுத்தோம் முன்னோடிக் கருப்பையா

பால்தயிர் பன்னீர் அபிஷேகம் செய்திட்டோம் கருப்பையா
ஜல்ஜல் ஓசையுடன் சட்டென வந்துவிடு கருப்பையா
சந்தனம் விபூதி அபிஷேகம் செய்திட்டோம் கருப்பையா
அந்திசந்தி ஆபத்து நேரத்தில் காத்திடுவாய் கருப்பையா

இளநீர் பழங்கள் அபிஷேகம் செய்திட்டோம் கருப்பையா
நாள்தோறும் எங்களுக்கு நல்லதைச் செய்திடுவாய் கருப்பையா
ஆண்டுதோறும் சொர்ணாபிஷேகம் செய்திட்டோம் கருப்பையா
வேண்டுதலை நிறைவேற்றி வைத்திடு பெரிய கருப்பையா

செங்கீரைத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்திட்டோம் கருப்பையா
எங்கள் குலத்தை என்றென்றும் காத்திடுவாய் கருப்பையா
மலராலே மகிழ்ச்சியுடன் அலங்காரம் செய்திட்டோம் கருப்பையா
பலவான்குடி மக்களுக்கு பக்கபலமாய் இருந்திடு கருப்பையா

பாச்சோறு பணியாரம் படைத்திட்டோம் பெரிய கருப்பையா
பூச்சொரியும் பார்வையுடன் பக்தர்களை பார்த்திடு கருப்பையா
பக்தியுடன் உனக்கு பள்ளயமிட்டோம் பெரிய கருப்பையா
சுக்குமாந் தடியுடன் வந்தருள் தந்திடு பலவான்குடி கருப்பையா.

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple news
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple news
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் ... மேலும்
 
temple news
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்டஅருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple news
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்டஅயல்நிற்கும் தென்னையெலாம் ... மேலும்
 
temple news
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar