Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news யாரிடம் எதைக்கூற வேண்டும்? ஜன்னல் வழியாக கண்ணன் தரிசனம்! ஜன்னல் வழியாக கண்ணன் தரிசனம்!
முதல் பக்கம் » துளிகள்
கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... கிருஷ்ணா..
எழுத்தின் அளவு:
கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... கிருஷ்ணா..

பதிவு செய்த நாள்

02 செப்
2015
05:09

எக்க சக்கமாக கும்பல் உள்ளேயும் வெளியுமாக போய்கொண்டிருக்கும் ஒரு பெரிய ஷாப்பிங் சென்டர் அது. அதன் வாசலில் ஒரு கண்ணாடி ஷோ ரூமில் நிறைய புது புது மாடல்களில் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது.அந்த கட்டிடத்தின் வாசலில் ஷோ ரூம் கண்ணாடி அறையின் வழியா உள்ளே இருக்கும் ஷூவெல்லாம் பார்த்துக்கொண்டே தெருவில் ஒரு 10 வயசு பையன் கன்னத்தில் கை வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தான். மார்கழி குளிரில் அவன் நடுங்கிக் கொண்டு இருந்தான். மேலே போர்வை இல்லை. காலில் செருப்புகூட இல்லஅவன் இருந்த இடத்துக்கு அருகே ஒரு பெரிய கார் வந்து அழகாக நின்றது. அதன் உள்ளேயிருந்து ஒரு பணக்கார பெண்மணி இறங்கினாள். அவள் பார்வை இந்த பையன் மேல் பட்டது.‘டே பையா, இந்த குளிரில் இங்கே என்னடா பண்றே, என்ன பார்க்கறே?‘ அவன் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடி வழியாக உள்ளே பார்வையிட்டான்.

அப்படி என்ன உள்ளே இருக்கு பார்க்க என்ற ஒரு ஆவல் மேலிட கண்ணாடி வழியாக பார்த்தாள். உள்ளே நிறைய வித விதமான காலணிகள். ‘இதையே உற்று பார்க்க என்ன இருக்கு? அதுக்கு எதற்காக வாயில் ஏதோ முணுமுணுக்கறே? ‘கொஞ்சம் நேரம் முன்னாடி இங்கே ஒருத்தர் ஒரு விஷயம் சொல்லிண்டு போனார். அது பிரகாரம் பண்ணிண்டு இருக்கேன்.“என்னடா சொல்றே?, யார் என்ன சொன்னார்?‘ ‘ ஒரு தாத்தா பக்கத்திலே இருந்த மாமா கிட்ட ‘நீ கவலையே படாதே. உன்னுடைய குறையை அந்த கிருஷ்ணன் கிட்ட சொல்லிடு. அவன் பாத்துப்பான். உன் தேவையெல்லாம் பூர்த்தியாயிடும். இது என்னுடைய அனுபவம்‘ என்று சொல்லிக்கொண்டே போனார். அதனாலே நான் ரொம்ப நேரமா இந்த கிருஷ்ணன் என்கிறவர் கிட்ட எனக்கு ஒரு ஷூ வேணும்னு வேண்டிண்டு இருக்கேன்..“அப்படியா. சரி. என்னோட கொஞ்சம் வரியா ‘உள்ளே அவனை அழைத்துக் கொண்டு சென்று அரை டஜன் சாக்ஸ் வாங்கினாள். ‘சார் ஒரு டவல் தரிங்களா?‘ என்று கடைக்காரிடம் கேட்டு பணத்தை நீட்ட அது கிடைத்தவுடன் டாய்லெட் ரூம் சென்று அவனை நிற்கவைத்து குனிந்து அவன் முழங்கால் வரை அலம்பி, அழுக்கு, மண் எல்லாம் நீக்கி டவலால் துடைத்து சாக்ஸ் மாட்டினாள். அவன் கால் அளவுக்கு நல்ல புது விலையுயர்ந்த புது மாடல் ஷூவும் காலில் இணைந்தது. மீதி 5 ஜோடி சாக்ஸ் பொட்டலம் கட்டி பையில் போட்டு அவனிடம் நீட்டி முதுகில் தட்டி ‘இப்போ சந்தோஷமாடா?‘ கேட்டுவிட்டு நடந்தாள் அந்த பெண்மணி. போகின்றவள் கையை பிடித்து இழுத்து அவளை உற்று பார்த்த பையன் கண்களில் பிரவாஹம். அவன் வாயிலிருந்து ஒரு சந்தேக கேள்வி எழுந்தது ‘ நீ தான் கிருஷ்ணனோட அம்மாவா?‘ என்று.

நீதி: இறைவனை வேண்டினால் ஏதாவது ரூபத்தில் நமக்கு வேண்டியது கிடைப்பது நிச்சயம்!

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar