Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news ஏகாதசி எப்படி உருவானது? ராகு கேது பெயர்ச்சியால் பாதிப்பா! கவலையை விடுங்க! ராகு கேது பெயர்ச்சியால் பாதிப்பா! ...
முதல் பக்கம் » துளிகள்
ராகு-கேதுவால் நற்பலன் பெறும் ராசிகள்!
எழுத்தின் அளவு:
ராகு-கேதுவால் நற்பலன் பெறும் ராசிகள்!

பதிவு செய்த நாள்

22 டிச
2015
02:12

நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. பொதுவாக எல்லா கிரகங்களும் கடிகார முள்சுற்றும் திசையில் சுழல்கின்றன. ஆனால் ராகுவும், கேதுவும் மட்டும் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ஒரு ராசியில் ராகு-கேது ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் சனி, ராகு-கேது, குரு ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் ராகு-கேது பெயர்ச்சியும் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும். ராகுவும்-கேதுவும் ஒரே நாளில்தான் இடம் பெயருவார்கள். 8-1-2016ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று ராகு கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும், கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கும் மாறுகிறார்கள். இவர்கள் 26-7-2017 வரை இதே இடத்தில் இருப்பார்கள். பொதுவாக கோச்சார பலனை கணிக்கும் போது, மற்ற முக்கிய கிரகங்களின் நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த ராகு-கேது பெயர்ச்சி நடைபெறுவதற்குள் குருபகவான் ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசியில் இருக்கும் குரு 7-2-2016 அன்று வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். அவர் 20-6-2016 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்குள்ளேயே இருக்கிறார். 1-8-2016 அன்றுதான் கன்னி ராசிக்கு மாறுகிறார். அங்கு அவர் 16-1-2017 வரை இருப்பார். அதன்பிறகு துலாம் ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் அவர் 9-4-2017 முதல் 3-8-2017 வரை வக்கிரம் அடைந்து கன்னி ராசியில் இருக்கிறார். சனிபகவான், தற்போது விருச்சிக ராசியில் நிலை கொண்டுள்ளார். அவர் 28-3-2016 முதல் 14-7-2016 வரை, மற்றும் 24-4-2017 முதல் 6-8-2017 வரை வக்கிரம் அடைகிறார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு ராகு கேது பலனை தொகுத்து கொடுத்துள்ளோம். எளிய பரிகாரங்களையும் தந்துள்ளோம். மேலும் இன்னொன்றை கவனிக்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டு இருப்பது கோச்சாரபலன்தான். அதாவது ஒவ்வொரு ராசிக்கும் இது பொதுவான பலன். தனிப்பட்ட முறையில் முழுபலனையும் அவரவர் ஜாதகத்தில் உள்ள தசா, புத்தியை கொண்டு கணித்து பார்க்க வேண்டும். ராகு-கேது பெயர்ச்சியில் சுமாரான பலன் இடம் பெற்று இருந்தாலும் கூட, ஒருவரது ஜாதகத்தில் நல்ல தசா புத்தி இருந்தால் கண்டிப்பாக பாதிப்பு குறையும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரமும் நல்ல பலனை தரும்.

ராகுவால் நற்பலன் பெறும் ராசிகள்!

மிதுனம்,துலாம், மீனம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்!
கன்னி, விருச்சிகம், கும்பம்

பரிகார ராசிகள்!
மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, மகரம்

கேதுவால் நற்பலன் பெறும் ராசிகள்!
மேஷம், கன்னி, தனுசு

சுமாரான பலன் பெறும் ராசிகள்!

ரிஷபம், சிம்மம், மீனம்

பரிகார ராசிகள்!
மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2016

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar