Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news விநாயகரின் திருமணம் நடைபெற்ற தலம்! என்றும் நிலைத்திருக்கும் ஏழு பேர்! என்றும் நிலைத்திருக்கும் ஏழு பேர்!
முதல் பக்கம் » துளிகள்
நோய் தீர்க்கும் அபிஷேக நீர்!
எழுத்தின் அளவு:
நோய் தீர்க்கும் அபிஷேக நீர்!

பதிவு செய்த நாள்

28 டிச
2015
05:12

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம் பொருளை ஓரிடத்தில் குவிக்க வைக்கும் கோயில்கள் நம் பாரத பண்பாட்டுச் சின்னங்கள். ஒலியும், ஒளியும் தான் ஜீவனின் படைப்பு ஆதாரங்கள். இவ்விரண்டும் இணைந்து இறையருள் தரும் அற்புதக் கலைக்கூடமே கோயில்கள். கருங்கல்லில் ஒலி, ஒளி அதிர்வுகளைக் கடத்தும் திறன் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் கர்ப்பக் கிரகத்தில் கருங்கல்லில் சிலை வைத்தனர். ஆகம விதிகளின்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் உயரம், அகலம் மற்றும் கருவறை உள் அளவுப்படி சிலைகள் வடிக்கப்படுகின்றன.

ஓம் என்ற மந்திரம் தொடர்ந்து கருவறையில் ஒலிக்கும்போது அந்த ஒலி மூலஸ்தான கற்சிலையில் பட்டு எதிரொலிக்கிறது. அப்போது அங்குள்ள காற்று மண்டலம் ஒரே மாதிரியான அதிர்வைப் பெறுகிறது. இந்த கருவறையில் நிலவும் சக்தி மூலக்கூறுகள் வழிபடும் பக்தர்களை சென்றடையும் போது அவர்களின் மனம் அமைதி பெறுகிறது. தினசரி கோயில் வழிபாடு மனமகிழ்ச்சி தரும். நம்மை ரீசார்ஜ் செய்யும். கோயிலினுள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள், பாடல்கள், ஸ்லோகங்கள் பல்லாயிரம் மடங்கு பலன் தரும். கும்பாபிஷேகத்தின்போது சிலைக்கும், பீடத்துக்கும் நடுவில் அஷ்டபந்தனம் சாற்றுவார்கள். பலவிதமான மருந்து பொருட்கள் மற்றும் பஞ்ச லோகக் கலவையே அஷ்டபந்தனம். யாக சாலையில் உள்ள கலசத்திலிருந்து கற்சிலைக்கு தர்ப்பையினாலான கயிறு வரும். இது மந்திர சக்தி ஏற்றுவதற்கானதாகும். ப்ராணபிரதிஷ்டை செய்து இறையருளை விக்ரகத்தில் நிலைபெறச் செய்கின்றனர். பழனி பாலதண்டாயுதபாணி சிலை போகரால் நவபாஷாண கலவையினால் உருவாக்கப்பட்டது.

கற்சிலையில் தண்ணீர், பால், எண்ணெய், தேன், தயிர், விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் என ஒவ்வொரு பொருளையும் அபிஷேகம் செய்யும் போது மின்கடத்தும் திறன் வேறுபடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதையே நம் முன்னோர்கள் ஒவ்வொரு அபிஷேகப் பொருட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் எனக் கூறியுள்ளனர்.

அறிவியல் பலன்கள்: அபிஷேகத்தின் போது பல நிறங்களை மாறி மாறிப் பார்ப்பதால் கண்களில் உள்ள நரம்புத் துடிப்புகள் சீராக மாறி மன அமைதி ஏற்படும். கற்கண்டு, வாழைப்பழம், நெய், தேன், நாட்டு சர்க்கரை இந்த ஐந்து பொருட்களில் கூட்டுக் கலவையே பஞ்சாமிர்தம் எனப்படும். உடலின் வெப்ப சமன்பாடை அதிகரிக்க உதவும் பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்தின்போது சிலையின் மீது வைத்துத் தரும்போது இறையருளுடன் இணைந்து அமிர்தமாக மாறும். இதை பிரசாதமாக ஏற்று பலன் பெறுகிறோம். மேலும் அபிஷேக தீர்த்தம் நோய் தீர்க்கும் ஔஷதமாகத் திகழ்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar