Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news சிறப்புமிக்க சிவதாண்டவம்! வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்..! வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க ...
முதல் பக்கம் » துளிகள்
துயர் நீக்கும் துளசி!
எழுத்தின் அளவு:
துயர் நீக்கும் துளசி!

பதிவு செய்த நாள்

01 ஏப்
2016
04:04

திருமால் பாற்கடலில் பள்ளிகொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாத்துவதும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரீதியானது. பிருந்தா எனும் பெயரும் துளசிக்கு உண்டு.

பிருந்தா, பிருந்தாவனி விஷ்வபூஜிதா, விஷ்வபாவனி
புஷ்பசாரா, நந்தினி க்ருஷ்ண ஜீவனி துளசித்வாம் ரக்ஷ ரக்ஷமாம்

என்று கூறி, மஞ்சள், குங்குமம், புஷ்பம் முதலியவற்றால் துளசிச் செடியை அர்ச்சித்து கற்பூரஹாரத்தி காட்டலாம். துளசியை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யம், புத்திர சம்பத்து, நல்ல கணவன், புகழ், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும். துளசியைக் கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவை அர்ச்சிப்பதால் நான்கு லட்சம் முறை நமஸ்காரம் செய்த பலன் கிடைக்கும். ஒருமுறை அர்ச்சித்த துளசியை நீரில் அலம்பிவிட்டு மீண்டும் உபயோகிக்கலாம். துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஏகாதசி மற்றும் இரவு நேரங்களில் துளசியை பறிக்கக்கூடாது. துளசி செடிக்கு தண்ணீர் அளிப்பது மிகவும் புண்ணியம். இதை ஆண், பெண் என அனைவரும் செய்யலாம்.

அறிவியல் பயன்கள்: துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்தல், உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும். தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது. துளசி மணி மாலை அணியும் போது அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு பல நோய்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி. துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து. ஒரு மணி நேரம் ஊற வைத்து நீராட, பேன், பொடுகு தொல்லை நீங்கும். வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் முதலியவற்றுக்கும் துளசி அருமருந்தாகும்.

அனைத்து தாவரங்களுமே பகலில் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடுகின்றன. ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் திறன் படைத்தது. இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இத்தனை சிறப்புகளுடைய துளசியை வளர்த்து, வணங்கி உண்டு உயர்வு பெறுவோம்!

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar