பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களும் அவற்றின் சமஸ்க்ருத பெயர்களும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2017 02:04
அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது பலவித நைவேத்ய பொருளை பயன்படுத்துவோம். அவ்வாறு நாம் பயன்படுத்தும் நைவேத்ய பொரு ள்களும் அவற்றின் சமஸ்க்ருத பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
அவையாவன:
1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம் 2) முழுத்தேங்காய் - நாரிகேலம் 3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ 4) வாழைப்பழம் - கதலி பலம் 5) மாம்பழம் - ஆம்ர பலம் 6) விளாம்பழம் - கபித்த பலம் 7)நாகப்பழம் ( நாவல்பழம் ) - ஜம்பு பலம் 8) பலாப்பழம் - பனஸ பலம் 9) சாத்துக்குடி - நாரங்க பலம் 10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம் 11) பேரிக்காய் - பேரீ பலம் 12) கொய்யாப் பழம் - பீஜா பலம் 13) திராட்சை பழம் - திராட்ஷா பலம் 14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம் 15) பிரப்பம் பழம் - வேத்ர பலம் 16) கரும்பு - இக்ஷூ தண்டம் 17) மாதுளம்பழம் - தாடிமீ பலம் 18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம் 19) வடை - மாஷாபூபம் 20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம் 21) எள்ளுச்சாதம் - திலோன்னம் 22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம் 23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம் 24) வெண்பொங்கல் - முத்கான்னம் 25) புளியோதரை - திந்திரிணியன்னம் 26) வெள்ளைசாதம் - சுத்தான்னம் 27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம் 28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம் 29) தயிர்சாதம் - தத்யோன்னம் 30) பலவித சாதங்கள் - சித்ரான்னம் 31) சுண்டல் - க்ஷணகம் 32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம் 33) வெல்ல பாயாசம் - குட பாயஸம் 34) புட்டு - குடமிச்சபிஷ்டம் 35) முறுக்கு - சஷ்குலி 36) இட்லி - லட்டுகானி 37) கொழுக்கட்டை - மோதகானி 38) அப்பம் - குடாபூபம் 39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம் 40) அதிரசம் - குடாபூபம் 41) உளுந்து - மாஷம் 42) பயறு - முத்கம் 43) எள் - திலம் 44) கடலை - க்ஷணகம் 45) கோதுமை - கோதுமா 46) அரிசி - தண்டுலம் 47) அவல் - ப்ருதுகம் 48) நெய் - ஆஜ்யம் 49) பருப்பு பாயாசம் - குடபாயஸம் 50) பால் - க்ஷீரம் 51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம் 52) வெண்ணெய் - நவநீதம் 53) கல்கண்டு - ரஸ கண்டாளீ 54) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம் 55) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம் 56) தாமரைப்பூ - பத்மபுஷ்பம் 57) அருகம்புல் - தூர்வாயுக்மம் 58) வன்னிஇலை - வன்னிபத்ரம் 59) வில்வ இலை - பில்வபத்ரம் 60) துளசி இலை - துளஸிபத்ரம் 61) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம் 62) விளக்கு - தீபம் 63) சூடம் - கற்பூரம் 64) மனைப்பலகை - ஆசனம் 65) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம் 66) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை 67) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம் 68) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம் 69) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம் 70) பூநூல் - யக்ஞோபவீதம் 71) சந்தணம் - களபம் 72) விபூதி - பஸ்பம் 73) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா.