மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக, திருச்சூர் -எர்ணாகுளம் சாலையில் உள்ள திருக்கூர் சிவன் கோவிலில் தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டுவர். இந்த கயிறுகள் கோவில் மண்டபத்தில் தொங்க விடப்படுகின்றன. மாலை நேர பூஜையின் போது 108 வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர். அந்த இலைகளில் சந்தனத்தால் ராமா என்று எழுதப்பட்டிருப்பது சிறப்பு. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் செயல் இது.