கடவுளின் படைப்பில் எதுவும் தாழ்வு இல்லை என்பதை உணர்த்தும் விதத்தில், யாரும் விரும்பாத எளிய பூக்கள் கூட வழிபாட்டிற்குரியதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பெருமாளுக்கு துளசி மாலையை விட தும்பைப்பூ சிறந்ததாகக் கருதப்படுகிறது. தும்பைப்பூ மாலையை பெருமாளுக்கு அணிவித்து வழிபட்டால், தங்கத்தை ஏழைப் பெண்ணுக்கு தானம் கொடுத்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு ஒரு ஊமத்தம்பூவை சாத்த, லட்சம் பசுக்களை தானம் அளித்த பலன் கிடைக்கும் என பவிஷ்ய புராணம் கூறுகிறது.