ஆனி மாத தேய்பிறை ஏகாதசிக்கு அபார ஏகாதசி என்று பெயர். இந்நாளில்( ஜூன் 20) விரதமிருந்தால் வியக்கும் விதத்தில் அபாரமாக பலன் இருப்பதால் இப்பெயர் உண்டானது. கொலைப்பாவம், பெரியோர் சாபம், பொய் சாட்சி போன்ற பாவங்கள் விலகுவதோடு புண்ணியமும் சேரும். சிவராத்திரியன்று காசி விஸ்வநாதர் தரிசனம், மாசி மகத்தன்று திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்த புண்ணியம் இந்த விரதம் மேற்கொண்டால் உண்டாகும்.