கேட்டை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஜேஷ்டா என்று பெயர். உலக நன்மைக்காக ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று (ஜூலை 7) கோவில்களில் நடத்தப்படும் அபிஷேகம் ஜேஷ்டாபிஷேகம். அன்று காலையில் பழநி முருகனுக்கு காலையில் ஜேஷ்டாபிஷேகமும், மதியம் உச்சிகாலத்தில் அன்னாபிஷேகமும் நடக்கும். கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். இந்நாளில் முருகனை வழிபட்டால் இந்திரன் போல ராஜயோகத்துடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.