சுபக்கிரகமாக திகழும் சந்திரன், தஞ்சை மாவட்டம், திங்களூர் கைலாசநாதர் கோவிலில் மேற்கு நோக்கி வீற்றுள்ளார். தட்சனின் 27 மகள்களும் சந்திரனின் அழகால் கவரப்பட்டு அவரைத் திருமணம் செய்தனர். இவர்களில் கார்த்திகை, ரோகிணி என்ற மனைவிகள் மீது மட்டும் சந்திரன் அதிக அன்பு செலுத்தினான். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தட்சனிடம் முறையிட்டனர். பலமுறை புத்திமதி சொல்லியும் சந்திரன் கேட்கவில்லை. கோபமடைந்த தட்சன் சந்திரனின் அழகு அழியும்படி சபித்து விட்டான். தன் சாபம் தீர பூலோகம் வந்த சந்திரன், திங்களூரில் இருந்த சிவனை வணங்கினான். அழகு நிலையற்றது என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், 15 நாள் வளரவும், 15 நாள் தேயவும் தண்டனையைக் குறைத்தார் சிவன்.