பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரமான மாலை 6:30 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரையில் உள்ள காலம் மிகவும் தோஷமுள்ள காலமாகும். இந்நேரத்தில் தீய சக்திகள், அசுரர்கள், ராட்சஷர்கள் நடமாடுவர் என்பது ஐதீகம். எனவே, இந்நேரத்தில் சாப்பிடவோ, தூங்கவோ கூடாது. இந்நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது இதனால் தான். கடவுளின் அருகே கெட்ட சக்திகள் நெருங்காது. ஆனால், இந்நேரத்தில் சுவாமிக்கு பூஜை செய்து, படைக்கும் நைவேத்ய உணவை சாப்பிடலாம்.