கிரகங்களைக் கணக்கில் கொண்டே, வாரநாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், சூரியனுக்கும் தொடர்பு உள்ளது. சூரியனே நவக்கிரகங்களில் முதன்மையானவர். இவருக்கு ஞாயிறு என்ற பெயர் உண்டு. இதற்கு எல்லா கிரகங்களையும் இறுகப்பிடித்தல் என்று பொருள். சூரியனின் ஈர்ப்பு விசையால் தான், கிரகங்கள் அந்தரத்தில் தொங்கினாலும் ஆபத்தின்றி உள்ளது. எனவே, இவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், முதல் நாளாக ஞாயிற்றுக் கிழமை உள்ளது.