பெண்களின் கேசத்துக்கு ஓர் அபூர்வ சக்தியுண்டு. கணவனின் ஆயுளை நீட்டிக்கச் செய்து பூவுடனும் பொட்டுடனும் மங்களகரமான, நீண்ட மண வாழ்க்கையை பெண்களுக்கு அமைத்துத் தரும் ஓர் சக்தி பெண்களின் கேசத்துக்கு இயற்கையாகவே உண்டு. ஆகவேதான், கூந்தலுக்கு எண்ணெய்த் தடவி, புஷ்பம் சூடி, வாசனைப் பொருட்களால் அலங்கரித்து, அழகுபடுத்தப்படுகின்றன. ஆகவே, பெண்கள் தங்கள் தலைமுடியை முறையாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இதனால் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும், குடும்பத்தினருக்கும் நன்மை ஏற்படும். இதனால்தான் பெண்கள் தங்கள் தலை முடியை நீண்டதாகப் பராமரித்துப் பாதுகாக்கிறார்கள். பெண்கள் தலைமுடியை (நுனிப்பகுதியை) கத்திரித்துக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாக தலை முடியை நீக்குதல் போன்றவற்றை கூடியவரை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். சாஸ்திரங்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. திருப்பதி போன்ற க்ஷேத்ரங்களில் பெண்களும் கூட தலைமுடியை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இது பக்தர்களின் உணர்ச்சிபூர்வமான விஷயம். இதில் சாஸ்திரம் தலையிடாது.