விளக்கேற்றுவதற்கென விற்கப்படும் தனி எண்ணெயில்தான் விளக்கேற்ற வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2017 05:06
தீபம் ஏற்றுவதற்கென்று தனியாக ஏதும் எண்ணெய் கிடையாது. நாம் எப்படிப்பட்ட எண்ணெயை (உணவு சமைக்க) உபயோகிக்கிறோமோ, அதே எண்ணெயைக் கொண்டுதான் தெய்வ சன்னிதியில் தீபங்கள் ஏற்ற வேண்டும். கறுப்பு எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் தீபம் ஏற்றுவதே சிறந்தது. பக்தர்கள், பக்தி மிகுதியால் தாங்களாகவே ஆரம்பித்து பலராலும் பின்பற்றப்படும் பலவிதமான பழக்கங்களில், பலவிதமான எண்ணெய்களை ஒன்றாகக் கூட்டி, அவற்றால் தீபம் ஏற்றுதல் என்பதும் ஒன்றாகும். ஆனால், இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒன்றாகக் கலந்து தீபங்கள் ஏற்றுதல் என்பது சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. நல்லெண்ணெய் போன்ற எந்த எண்ணெயாக இருந்தாலும் அந்தந்த எண்ணெயால் மட்டுமே தெய்வ சன்னிதியில் தீபங்கள் ஏற்ற வேண்டும். இதுவே ஆகம முறையாகும். அனைத்து கோயில்களிலும் இதுவே பின்பற்றப்படுகிறது.