கன்னியாகுமரி கடலோரத்தில் கன்னி தெய்வமாக பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின்கொடுமை தாங்காமல் வருந்திய தேவர்கள், அம்பிகையின் உதவியை நாடினர். ஒரு கன்னியால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க, அம்பிகை கன்னியாக பிறப்பெடுத்து வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் மூன்றும் சங்கமிக்கும் இங்கு ஆடி அமாவாசையன்று நீராடி தர்ப்பணம் செய்தால் மன பலம் அதிகரிக்கும்.