கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள அமாவாசை தலம் அய்யாவாடி பிரத்யங்கிராதேவி கோயில். இலங்கை போரில் வெற்றி கிடைக்க ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். அமாவாசைஅன்று அம்மனுக்கு மிளகாய் வத்தல் கொண்டு நிகும்பல யாகம் நடக்கும். எனினும் நெடி இருப்பதில்லை. யாக குண்டத்தில் பழம், பட்டு, பூக்கள் என 108 வகையான திரவியங்களையும் போடுவர். அன்று சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் மகா அபிஷேகம் நடக்கும். இவளைத் தரிசிப்பவர்களுக்கு பயம் நீங்கும்.