நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், சிவன் அம்பிகையை இடது பாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோயிலான இங்குள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. இந்தப் படியின் முன் நின்று வம்பு, வழக்குகள் பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தத்தை அமாவாசையன்று பருகினால் நோய் நீங்கும். கணவன், மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.