பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
03:07
நினைச்சது 100 நாளில் நிறைவேறணுமா? தொடர்ந்து படியுங்கள். நீங்கள் விரும்பும் கோயிலில் 1000 முறை பிரதட்சிணம் செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும். பிரதட்சிணம் என்பதற்கு கோயிலைச் சுற்றுவது என பொருள். விஷ்ணு துயிலும் ஆஷாட ஏகாதசி (ஜூலை 4) முதல் விழித்து எழும் உத்தான ஏகாதசி (அக்.31) வரையுள்ள காலத்திற்குள் கோயிலை சுற்றி வருவது நல்லது. ஏற்கனவே விஷயம் தெரிந்தவர்கள் கோயிலை சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். தினமும் காலை, மாலையில் பெருமாள், சிவன், அம்மன், ஆஞ்சநேயர் கோயிலிலும், அரச மரம், துளசி மாடம், பசுவை காலையிலும் குறைந்தது 10 முறை சுற்றலாம். சுற்றும் போது, கர்ப்பிணி போல மெதுவாக சுற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை சுற்றினால் கூட 100 நாளைக்குள் ஆயிரத்தை எட்டி விடலாம். இதனால் தோஷம், பாவம் நீங்கும். உடல்பலம் மிக்கவர்கள் இந்த நாளில் 10000, 25000, லட்சம் எண்ணிக்கை என சுற்றுவது சிறப்பு. ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சிவனுக்கும், ஓம் பராசக்திநம என்னும் மந்திரத்தை அம்மனுக்கும் சொல்ல வேண்டும்.
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
பெருமாள்:
அனந்தம் அவ்யயம் விஷ்ணும்
லக்ஷ்மீம் நாராயணம் ஹரிம்
ஜகதீச நமஸ்துப்யம் ப்ரதக்ஷிண பதே பதே!
ஆஞ்சநேயர்:
ராமதூத! மஹாவீர! ருத்ர பீஜ ஸமுத்பவ!
அஜ்ஜனா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே!
பசு:
கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனாநி சதுர்தச
யஸ்மாத் தஸ்மாத் சிவம் மே ஸ்யாத் இஹ லோகே பரத்ர ச
துளசி:
ப்ரஸீத மம தேவேசி க்ருபயா பரயா முதா
அபீஷ்ட ஸித்திம் ஸெளபாக்யம் குரு மே மாதவப்ரியே