திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். இங்கு சோலைமலை முருகனும் கோயில்கொண்டிருக்கிறார். காவல்தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமி கோபுரவாசலில் குடிகொண்டிருக்கிறார். இவர் முன் சத்தியம் செய்து வழக்கு தீர்ப்பது நடைமுறையில் உள்ளது. அழகர்மலையில் அனுமன் தீர்த்தம், கருட தீர்த்தம், சக்கர தீர்த்தம், நூபுரகங்கை ஆகியவை உள்ளன. ஆடிஅமாவாசையன்று நூபுர கங்கையில் நீராடி மாமன் பெருமாளையும், மருமகன் முருகனையும் வழிபட்டு வரலாம்.