ஆவணி வளர்பிறை சதுர்த்தசியில் (செப்.5) ஆண்கள் மட்டும் ஆனந்த சதுர்த்தசி விரதம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனந்த விரதம் என்றும் பெயருண்டு. பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த காலத்தில் கிருஷ்ணனை நினைத்து இந்த விரதமிருந்து பலன் பெற்றனர். பூஜையறையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அல்லது திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமிக்கு இனிப்பு கலந்த அவலை பிரசாதமாக படைத்து வழிபட வேண்டும். இந்த விரதமிருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சவுபாக்கியம் உண்டாகும் என கேசவப்பெருமாள் புராணம் கூறுகிறது. கேரளாவில் இது சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது.