திருமாலின் மார்பினை அலங்கரிக்கும் துளசியை விஷ்ணுவின் மனைவி என்று தேவீ பாகவதம் என்ற நுõலில் குறிப்பிட்டுள்ளனர். திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத்தோடு துளசி பிறந்ததாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. லட்சுமியின் அம்சமான துளசி இருக்குமிடத்தில் விஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எதனோடும் ஒப்பிட முடியாத உயர்வான பொருள் துளசி. ஒருமுறை, சுவாமிக்கு அணிவித்த துளசியைக் கழுவி, மீண்டும் ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தலாம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துளசிதீர்த்தம் அருந்தி விரதம் பூர்த்தி செய்வர். துளசிமாட வழிபாட்டைத் துவங்க ஏற்ற மாதம் கார்த்திகை. கார்த்திகை சோமவாரம், கார்த்திகை அமாவாசை நாட்களில் துளசிமாடத்தை வலம் வந்து வழிபட விரைவில் திருமணயோகம் உண்டாகும்.