Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அர்த்த சாஸ்திரம் தெரிந்து ... சிம்ம மாதம் எனப்படும் ஆவணி மாதத்தின் சிறப்புகள்! சிம்ம மாதம் எனப்படும் ஆவணி ...
முதல் பக்கம் » துளிகள்
மன அமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் பெற்றிட எளிய வழி!
எழுத்தின் அளவு:
மன அமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் பெற்றிட எளிய வழி!

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
04:08

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் பிரகலாதன் மனம் கலங்கவில்லை, சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை, பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை, உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம் கலங்கவில்லை, அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை.

இளம் விதவையான சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை, தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் குசேலர் மனம் கலங்கவில்லை, ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை, பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் சூர்தாஸர் மனம் கலங்கவில்லை, மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை, கணவன் கஷ்டப்படுத்திய போதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை
இருகைகளையும் வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை.

கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் ஜயதேவர் மனம் கலங்கவில்லை, மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் சஞ்சயன் மனம் கலங்கவில்லை, பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் பூந்தானம் மனம் கலங்கவில்லை,  கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும் தியாகராஜர் மனம் கலங்கவில்லை, நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மனம் கலங்கவில்லை, சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் கூரத்தாழ்வான் மனம் கலங்கவில்லை.

எப்படி முடிந்தது இவர்களால்..? ரகசியம்
தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால் கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?
ஆழ்ந்த நம்பிக்கை அந்த நம்பிக்கை ஏற்பட வழி.

முதல் வழி (சொல்லறிவு)
அறிஞர்கள், ஞானிகள் மற்றும் சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்

இரண்டாம் வழி (சுய அறிவு)
மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, வாழும் பொழுது , உண்மை விளங்கும் போது , மனம் தெளிவடைந்து அப்போது ஏற்படுவது.

ஆழ்ந்த நம்பிக்கை. .. நம்பிக்கை ஏற்பட்ட பின் மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் வகையில் தொடந்து செய்யப்படும் பயிற்சி முறைகள். அந்த பயிற்சிகள் ..

பூரணத்துவமாக இருக்கலாம், சுத்தாத்வைதமாக இருக்கலாம்,  கீர்த்தனைகளாக இருக்கலாம். மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் ‘அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்,  ஒருங்குவித்தல் , ஸ்ரத்தை , பொறுப்பு, வளப்படுத்துதல் , எனும் நான்கு தத்துவங்களாகவும் இருக்கலாம். இவற்றை மாறாமல் கடைபிடித்தால் வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம். என்ன நடத்தாலும், எதை இழந்தாலும், ‘ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும் அந்த ஆத்ம பலமே எதையும் தாங்கும் சக்தி. ஆதலால் ‘சிவத்துவமசி என்ற உணர்வுடன் வாழ்வோம் ‘ அன்பே கடவுள் என போற்றுவோம். உறுதியுடன் உண்மையாக இருப்போம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar