குழந்தை முதல் முதியவர்கள் வரை, எல்லோருக்கும் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத பால் தருவது பசு. தாய்ப்பாலுக்கு ஒப்பானதைத் தருவதால், எல்லோருக்கும் தாய் என்ற நிலையில் கோமாதா என போற்றப் படுகிறது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. இப்படி சிறப்பான விஷயங்களால் மற்ற விலங்குகளை விட முக்கியத்துவம் பெறுகிறது. பசுக்கள் வதை செய்யப்படாமல் காப்பாற்றப் படுகின்றனவோ அங்கே சுபிட்சம் நிலவும்.