பெருமாளின் கையில் உள்ள சங்கிற்கு பாஞ்சஜன்யம் என பெயர். இதன் ஒலி அதர்மக்காரர்களின் அடிவயிற்றை கலக்கும் சக்தி படைத்தது. அதே நேரம் தர்மத்தின் பக்கம் இருப்பவர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் தரும். இது பகவான் கிருஷ்ணரின் குருவான சாந்தீபனி மகரிஷியால் அவருக்கு தரப்பட்டது. கிருஷ்ணனின் உதடுகளில் பட்டு, இந்த சங்கு அனுபவித்த பாக்கியத்தை தாங்கள் பெறவில்லையே என ஆயர்பாடி கோபியர்கள் பொறாமைப்பட்டனர். இதன் பெருமையை ஆண்டாள் பாடியுள்ளார்.