மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டமம் ஏற்படும். இந்தக் காலம் இரண்டரை நாள்கள் நீடிக்கும் சந்திரன் மனதுக்கு அதிபதி. அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மனம் சஞ்சலத்துடன் இருக்கும். ஆகவே தான். சந்திராஷ்டம் தினங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். அந்த நாள்களில் மன சஞ்சலம் விலகி, சந்தோஷம் பெற பிள்ளையாரையும் பிறைசூடிய பெருமானையும் வழிபட்டுப் பலனடையலாம்.