திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயார், நவராத்திரி நாட்களில் மாலையில் சங்கு ஒலிக்க புறப்படுவாள். பிரகாரத்தை ஒருமுறை வலம் வந்த பின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து கருவறைக்கு திரும்புவாள். அது வரை நாதஸ்வரக் கச்சேரி நடக்கும். கருவறைக்கு தாயார் எழுந்தருளும்போது, யானை துதிக்கையை உயர்த்தி வணக்கம் செலுத்தி மவுத்ஆர்கனில் ஒலி எழுப்பும். பின்னர் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை பார்க்க கூட்டம் கூடும். நவராத்திரி ஏழாம் நாளில் நடக்கும் திருவடி சேவையில் தாயாரை தரிசிக்க செல்வம் பெருகும்.