புகழ் பெற்ற சிவத்தலம் மதுரை மீனாட்சியம்மன் கோயில். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக, அங்கயற்கண்ணி மீனாட்சி இங்கு அவதரித்தாள். சிவன் தன் பக்தர்களுக்காக 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். எல்லாம் வல்ல சித்தராக சிவன் இங்கு எழுந்தருளியிருக்கிறார். தென்னாடுடைய சிவனே போற்றி என பக்தர்களால் மனமுருக கூறும் ஸ்லோகம் அமைய காரணமானது இந்தக் கோயில். இது சிவத்தலம் என்றாலும், சக்தி பீடங்களுள் முதல் பீடமாக திகழ்வதால், எல்லா பூஜைகளும் மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவனுக்கு நடக்கின்றன.