தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் புற்று வடிவில் ஆறடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறாள். இங்கு அம்பாளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் தைல காப்பு அபிஷேகம் நடக்கும். அப்போது ஒரு மண்டலம், அம்மன் வடிவத்தை வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்கே பூஜை நடக்கும். அப்போது கருவறையில் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகிய வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகத்தின் போது அம்மனின் உக்கிரம் அதிகமாவதை தவிர்க்க இளநீர், தயிர் நைவேத்யம் செய்வர்.