மேருமலையில் பிரம்மலோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் எனமும் மூர்த்திக்கும் தனித்தனி உலகங்கள் உள்ளன. இதுபோல அம்பிகைக்கு இந்த மலையின் ஒரு சிகரத்தில் தனி உலகம் இருக்கிறது. இதற்கு ஸ்ரீபுரம் என்று பெயர். தேவர்களுக்கு இடையூறு செய்த பண்டாசுரனை வதம் செய்த அம்பிகை, இங்கு லலிதாம்பிகா என்னும் திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்கிறாள். ஸ்ரீபுரத்தின் நடுவில் தேவலோக தச்சரான விஸ்வகர்மா மூலம் அமைக்கப்பட்டசிந்தாமணி கிருகம் என்னும் அரண்மனை உள்ளது. இங்கு தேவர்கள் அம்பிகையை தினமும் ஜகந்மாதாவான இவளே நம் மகாராணி ராஜராஜேஸ்வரி என்றுவழிபாடு செய்கின்றனர்.