பஞ்ச பூதங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாக விளங்குகிறது. அண்ணாமலை என்பதற்கு நெருங்க முடியாத மலை என பொருள். பிரம்மா, விஷ்ணுவுக்கு ஜோதி சொரூபமாக காட்சி தந்த சிவனே இங்கு மலையாக வீற்றிருக்கிறார். உண்ணாமுலை என்ற பெயரில் பார்வதிதேவி, இங்கு தவம் செய்து, சிவனின் உடம்பில் இடப்பாகம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. வாழ்வை வெறுத்த அருணகிரிநாதர் தற்கொலை செய்ய முயன்ற போது, முருகன் காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்டது இங்கு தான். சிவன் கோயில்களில் மூலவருக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம் இது. 9 கோபுரம் அமைந்த இத்தலம் ஞானபூமியாக திகழ்கிறது.