நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும், பலர் ஒன்று கூடி வீணை வழிபாடு செய்வர். இதற்கான காரணம் தெரியுமா? நவரத்னமாலா என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிவனின் பத்தினியான இவள் எப்போதும் சங்கீத இனிமையில் லயித்து இருப்பதாகவும், மிருதுவான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும் கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை சியாமளா என்று அழைப்பர். இன்னிசையால் வழிபட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் நவராத்திரியின் போது, வீணை இசை வழிபாடு நடத்துகின்றனர்.