வடமாநிலங்களில் சரஸ்வதியின் வாகனம் அன்னம். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், பாலை மட்டும் அருந்தும் அன்னம் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருந்தாலும், மனிதன் ஏற்க வேண்டும் என்பது தத்துவம். தென் மாநிலங்களில் சரஸ்வதிக்குஉரிய வாகனம் மயில். இதன் தோகையில் வட்டவடிவில் கண்கள் இடம் பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டுமல்லாமல் ஆயிரமாயிரம் கண்களோடு, புதியவற்றைக் கற்க வேண்டும் என்பது பொருள். அன்னத்தில் இருப்பவளுக்கு ஹம்ஸ வாஹினி, மயிலில் இருப்பவளுக்கு வர்ஹ வாஹினி என்று பெயர்.