அன்னையின் வடிவம் : பகளாமுகி தேவியானவள் ஒருகையில் கதாயுதத்தையும் மறுகையில் எதிரியின் நாக்கையும் பிடித்து காட்சி தருபவள் , அன்னையின் வரலாறு :
மதன் எனப்படும் அசுரன் ஒருவன் கடும் தவம் இருந்து தான் கூறும் அனைத்தும்
பலிக்கும்படியானதொரு வாக்கு சித்தியைப் பெற்றிருந்தான் , மேலும் அந்த
சக்தியை தவறான வழியில் பயன்படுத்தி அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுத்து
வந்தான் , மக்கள் அனைவரும் சென்று பகளாமுகி அன்னையிடம் முறையிட்டனர் அவள்
உடனே அசுரனின் நாக்கை இழுத்துப்பிடித்து அவனைப் பேச்சிழக்கச் செய்தாள்
அசுரன் அன்னையிடம் வேண்டிக்கொண்டதன் பேரில் தேவியோடு அசுரனையும் சேர்த்து
வழிபட்டு வருகின்றனர்.
பொருள் : கம்பீரமான தோற்றம் அளிப்பவளும் அம்ருதக் கடலின் நடுவில் மணிமண்டபத்தில் ரத்னமயமான மேடையில் தங்க சிம்மாசனத்தில் அல்லது தாமரைமலரில் வீற்றிருப்பவளும் உருக்கிவிடப்பட்ட பொன்னைப் போன்ற மேனியை உடையவளும் மூன்று கண்களை உடையவளும் தங்க குண்டலங்களை அணிந்தவளும் பிறைச்சந்திரனை தன் சிரசில் சூடியிருப்பவளும் மேல்நோக்கிய ஜடாபாரம் உடையவளும் பயம் அளிக்கும் முகத்தைக் கொண்டவளாகவும் சௌம்ய முகத்தைக் கொண்டவளாகவும் காட்சியளிப்பவளும் தெரிக்கும் புருவத்தை உடையவளும் ஒரு கையில் கதாயுதத்தையும் மறு கையில் எதிரியின் நாக்கினைக் கொண்ட இரு கரத்தினளாகவும் வஜ்ரம் ; கதை ; நாக்கு ; அபயம் கொண்ட நான்கு கரத்தினளாகவும் காட்சி அளிப்பவளும் சம்பகவனம் போன்று திகழ்பவளும் வெண்மயான சந்திரனைப் போன்று பிரகாசம் வாய்ந்த முகத்தை உடையவளும் ஆகிய பகளாமுகி தேவியை வணங்குகிறேன்!
வழிபாட்டு பலன் : பகளாமுகி ஆனவள் எதிரிகளின் பழிச்சொல்லில் இருந்து பக்தர்களைக் காப்பாற்றுவாள். நீதிமன்ற வழக்குகள் ; சட்டம் ; ஆட்சி ; அதிகாரம் இவைகளில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தீர்த்து வைப்பவள்.