அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள். நல்ல கனவு வந்தால் சரி, கெட்ட கனவானால் என்ன செய்வது? அந்தக் கனவுகள் பலிக்குமோ, பலிக்காதோ.. இது ஒருபுறம் இருந்தாலும், இதனால் நம் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நம்மைப் படுத்தி எடுத்துவிடும். இதற்குப் பரிகாரமாகச் சில விஷயங்களைச் சொல்லிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். கெட்ட கனவுகளைப் பற்றி வெளியே மற்றவர்களிடம் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட கனவு வருமானால், மறுநாள் பகலில் பசுவுக்குப் புல், பழம், கீரை கொடுக்க வேண்டும். அதேபோல் ‘அச்சுதா, கேசவா, சத்ய சங்கல்பரே ஜனார்த்தனா, ஹம்ச நாராயணா என்னைக் காத்தருள வேண்டும் ’ என்று பெருமாளின் திருநாமங்களைத் தியானித்து வழிபடுவதால், கெட்ட கனவுகளால் மனதில் ஏற்படும் பாதிப்புகள், மனச் சஞ்சலங்கள் விலகும்.