Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கெட்ட கனவுக்குப் பரிகாரம்! நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்பதன் பொருள் என்ன? நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ...
முதல் பக்கம் » துளிகள்
சங்கடம் தீர்க்கும் சனிபகவான் அருளும் தலங்களும் சிறப்பும்!
எழுத்தின் அளவு:
சங்கடம் தீர்க்கும் சனிபகவான் அருளும் தலங்களும் சிறப்பும்!

பதிவு செய்த நாள்

16 நவ
2017
03:11

சனி பகவான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருநள்ளாறு திருத்தலம்தான். புதுவை மாநிலம். காரைக்காலில் அமைந்திருக்கிறது இத்தலம். சனி பெயர்ச்சியன்று, அங்கு சென்று வழிபட்டு வர இயலாதவர்கள், சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள சனி பகவானின் கோயிலைத் தரிசித்து அவரது அருளைப் பெறலாம். இவை, ‘வட நள்ளாறு திருத்தலங்கள் ’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.
செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில் மேட்டுப்பாளையத்தில் வடதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் சனீஸ்வர பகவான், பஞ்சமுக ஆஞ்சநேயர் இருவரும் சேர்ந்தே அருள்பாலிக்கின்றனர்.
சென்னை, பொழிச்சலூரில் தொண்டை மண்டல அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சனிபகவான் அருள்பாலிக்கிறார்.
சென்னை, ஆதம்பாக்கம் விஸ்வரூப சனி பகவான் கோயிலில் உள்ள சனி பகவானின் உயரம் ஆறடி.
திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் வழியில், அருங்குளத்தில் சனி பகவானை பிரதிஷ்டை செய்த அகஸ்தீஸ்வரரை தரிசித்தால் சனி பகவானை தரிசித்த பரிகாரம் கிட்டும்.
சென்னை, சைதாப்பேட்டை சவுந்தரரேஸ்வரர் கோயிலில் இருக்கும் வன்னி மரத்தை சனிக்கிழமைகளில் வலம் வர, சனி பாதிப்புகள் மறையும்.

சனி பகவான் - சில அரிய தகவல்கள்: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் சனி பகவான் காகத்தின் மீது அமர்ந்து காட்சி தந்தாலும் கையில் மற்றொரு காகத்தையும் ஏந்தியுள்ளார்.
மன்னார்குடி அருகே, திருராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவலிங்கத்துக்கும் விநாயகப் பெருமானுக்கும் நடுவில் சனி பகவான் அமர்ந்து அருளுகிறார்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் குரு பகவானும் சனி பகவானும் மட்டுமே உள்ளனர். வேறு கிரஹங்கள் இல்லை.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவில் உள்ள திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயிலில் பொங்கு சனி பகவான் அருளுகிறார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே குச்சானூரில் சனி பகவான் அருளுகிறார்.
ஆரணியிலிருந்து நடுக்குப்பம் வழியாக படவேடு கிராமத்துக்குச் செல்லும் ஏரிக்குப்பம் தலத்தில் யந்திர வடிவில் சனி பகவான் அருள்பாலிக்கிறார்.
விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலை கல்வெட்டு எனும் தலத்தில் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து சனி பகவான் காட்சி தருகிறார்.
அரக்கோணம் மங்கம்மா பேட்டையில் சனி பகவான் மனைவி நீலா தேவியை மடியில் அமர்த்தி கல்யாண சனீஸ்வரராக அருள்புரிகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் சனி பகவானுக்கான சிங்கனாபூரில் உள்ளவர் சுயம்பு சனி பகவான். இவ்வூரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே கிடையாது.
முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் வாத்தலையில் தரைமட்டத்திலிருந்து 30 அடி உயரத்தில் கருவறைக்குள் பாதாளேஸ்வரர் அருளுகிறார். சனி பகவான் காக வாகனத்துடன் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருநள்ளாறு நல தீர்த்தத்தை சனி பெயர்ச்சியன்று காக்கைகள் குறுக்கே பறந்து கடப்பதில்லை.
தஞ்சாவூர், விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயிலில் சனி பகவான் தெற்கு நோக்கி மந்தாதேவி, ஜேஷ்டாதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
சிவபெருமானை இறைவன் என்னும் பாராமல் அவரை சிறை பிடித்தார் சனி பகவான். சனி பகவானைப் பாராட்டி அவருக்கு, ‘ஈஸ்வர ’ பட்டம் வழங்கினார். சிவன், இதனாலேயே ‘சனீஸ்வரர் என சனி பகவான் அழைக்கப்படுகின்றார்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar