சிவபெருமானைப் பித்தா பிறைசூடி என்று பாடியவர் சுந்தரர். இளம்பிறையைத் தலையில் அணிந்ததால் சிவனுக்குபிறைசூடி என்று பெயர் இருக்கிறது. சிவபெரு மான், தனது சிரசின் இடது பக்கத்தில் பிறை சூடுவது வழக்கம். அர்த்தநாரீஸ்வரராக தேவியோடு காட்சி தரும் போது சிவனின் வலப்பாகத்தில் பிறை இடம்பெற்றி ருக்கும். இடப்பாகம் அம்பிகைக்கு உரியதாக இருப்பதால் அதில் மட்டும் இடம் மாறியிருக்கும்.