“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் பயனில்லை. அதனால் வாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை6:00 – 7:00) செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். ‘கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்” என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாக சொல்கிறது. சூரியனுக்குரிய ஞாயிறன்று இந்த ஆண்டு பொங்கல் (ஜன.14) வருவது குறிப்பிடத்தக்கது.