இறைவனது திருநாமத்தை நூற்றெட்டு முறை சொல்லி அர்ச்சிப்பது அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை. ஆயிரம் முறை சொல்லி செய்வது சகஸ்ரநாம அர்ச்சனை. சகஸ்ர நாமத்தை நூறு முறை சொல்லி அர்ச்சித்தால் ஒரு லட்சம் கணக்கு வரும். இதுவே ‘லட்சார்ச்சனை’ எனப்படுகிறது. ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் சொல்லி அர்ச்சித்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும்.