தேவர்கள் விரும்பும் இடமான மலை, தெய்வத்தன்மை மிக்கது என மகாகவி காளிதாசர் குறிப்பிடுகிறார். ஞானம் அளிக்கும் சக்தி உள்ளதால், மலையில் தவமிருந்த முனிவர்கள் ஆன்மிக ஞானம் பெற்று மக்களுக்கு வழிகாட்டினர். சிவனுக்கு “கிரீசன், கிரிசன்” என்ற பெயருண்டு. ‘கிரீசன்’ என்றால் ‘மலையின் கடவுள்’ எனவும், ‘கிரிசன்’ என்றால் ‘மலைகளில் உறங்குபவன்’ என்றும் பொருள். இதனடிப்படையில், நம் முன்னோர் கிரிவலம் செய்து மலையை வழிபட்டனர்.