டி.வி., அலைபேசி ஆகியவற்றின் வருகையால் ஆன்மிக எண்ணம் குறைந்து விட்டது. குழந்தைகளுக்கு சோறூட்டுவதே அலைபேசியில் படமும், பாடலும் காண்பித்து தானே! பெற்றோர் குழந்தைகளுடன் ஆன்மிகம் பற்றி பேசுவதோ, கோயில்களுக்கு அழைத்து செல்வதோ கிடையாது. அதை விடவும் தங்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, இணையதளத்தில் பிடித்ததை பார்க்கவும் குழந்தைகளுக்கு கற்று தருகின்றனர். பள்ளியிலும் மதச்சார்பின்மை என்ற பெயரில் ஆன்மிகம் புறக்கணிக்கப் படுகிறது. தமிழ்ப் பாடத்திற்கு முக்கியத்துவமும் இல்லை. தமிழ்வழி ஆன்மிக நூல்களை வாரம் ஒருமுறையாவது கற்று கொடுங்கள்.