நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி சென்றார். சமாதானம் செய்ய அம்பிகையும், சிவனும் பின்தொடர, இத் தலத்தில் முருகன் நின்றார். அம்பிகை, மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும், முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி தங்கி விட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. குழந்தை வடிவமாக நின்றதால், ‘குழந்தை வேலாயுதர்’ என்று பெயர் பெற்றார். பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், ‘பழம் நீ’ (நீயே ஞான வடிவானவன்) என்று சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், ‘பழநி’ என மருவியது.