‘தண்டம்’ என்றால் ‘கோல்’ அல்லது ‘அபராதம்’. ‘இவ்வுலக வாழ்வு நிலையற்றது’ என்னும் ஞான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புகிறார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கி தவிக்கும் மக்களை ஆசைகளை துறந்து, தன்னை போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களை சோதித்து திருத்துகிறார்.