பதிவு செய்த நாள்
10
பிப்
2018
05:02
ராமனின் தந்தை தசரதருக்கு முன்பு அயோத்தியை ஆண்ட மன்னர் சித்திரபானுவை, அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் சந்திக்க வந்தார். அன்று விரதமிருந்த மன்னன் முனிவரிடம், “நான் சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு, மான் ஒன்றை கொன்றேன். காட்டிலேயே தங்கி விட்டேன். அன்றைய தினம் சிவராத்திரி என்பது எனக்கு தெரியாது. மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசியில் தூக்கம் வரவில்லை. இலைகளை பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பிறகு வீட்டுக்கு சென்று விட்டேன். நான் மரணமடைந்ததும், இரு சிவதூர்கள் என்னை அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர்கள்,
“நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. ஏறியது ஒரு வில்வ மரத்தில். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்து போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார் ச்சனை செய்ததால், உனக்கு நற்கதி கிடைத்தது, என்றனர். அதனால், இப்போது நாடாளும் மன்னனாகும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர்.