சிவராத்திரியன்று இரவில், சிவலிங்கத்துக்கு நான்கு ஜாம அபிஷேகம் நடக்கும் முறை தெரியுமா?
முதல் ஜாமம் : பஞ்ச கவ்ய அபிஷேகம். சந்தன பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம் மற்றும் அர்ச்சனை. பச்சைப் பயிறு பொங்கல் நிவேதனம். ரிக் வேத பாராயணம்.
இரண்டாம் ஜாமம் : சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம். பச்சைக் கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல். துளசி அலங்காரம், வில்வத்தால் அர்ச்சனை. பாயசம் நிவேதனம். யஜுர் வேத பாராயணம்.
மூன்றாம் ஜாமம்: - தேன் அபிஷேகம். பச்சை கற்பூரம் சார்த்துதல். மல்லிகை அலங்காரம். வில்வ அர்ச்சனை. எள் அன்னம் நிவேதனம். சாம வேத பாராயணம்.
நான்காம் ஜாமம்: - கருப்பஞ்சாறு அபிஷேகம். நந்தியாவட்டை மலர் சார்த்துதல். அல்லி, நீலோற்பவம், நந்தியாவர்த்த அலங்காரம் மற்றும் அர்ச்சனை. சுத்தான்னம் நிவேதனம். அதர்வண வேத பாராயணம்.